பாரம்பரிய விளையாட்டுகள் என்னென்ன தெரியுமா?... வாங்க விளையாடலாம்...

பாரம்பரிய விளையாட்டு போட்டிகளை மீட்டெடுக்கும் முயற்சியில், 700க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டு அசத்தி வருகின்றனர்.

பாரம்பரிய விளையாட்டுகள் என்னென்ன தெரியுமா?... வாங்க விளையாடலாம்...

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தனியார் திருமண மண்டபத்தில் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றது. 16 வகையான பாரம்பரிய விளையாட்டுகளை குழந்தைகள் விளையாடி வருகின்றனர்.காங்கேயம் பகுதியை சேர்ந்த  பெண்கள் ஒன்றிணைந்து தமிழர் பாரம்பரிய கலை மன்றம் என்ற அமைப்பை உருவாக்கி பாரம்பரிய விளையாட்டுகளை மீட்டெடுக்க முயற்சி செய்துவருகின்றனர்.இந்த முயற்சியின் ஒரு அங்கமாக இன்று நடைபெறும் நிகழ்வில்  700க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க | மாநில அளவிலாக நடந்த சைக்கிள் போட்டிகள்...

காங்கேயம் சென்னிமலை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் இன்று  நடைபெற்று வருகின்றது. இதில் 700க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்துகொண்டு ஆர்வத்துடன் விளையாடி வருகின்றனர். குழந்தைகள் தினத்திற்கு நடக்க இருந்த இந்த போட்டிகள் தொடர்மழையின் காரணமாக. ஒத்திவைக்கப்பட்டு இன்று நடைபெற்று வருகின்றது.

இதில் முன்பதிவு செய்யப்பட்ட பின்னரே குழந்தைகளை விளையாட அனுமதிக்கின்றனர். பாரம்பரிய விளையாட்டு போட்டிகளை மீட்டெடுப்பதற்காக இலவசமாக நடத்தப்படுவதாகவும் போட்டியின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். தாயக்கரம், பல்லாங்குழி, பருப்புகள் பிரித்தெடுத்தல், செங்கல் நகர்த்தல்,சாக்குப்போட்டி ,உறியடித்தல்,பலூன் உடைத்தல்  உட்பட 16 விளையாட்டுகள் நடைபெற்று வருகின்றது.

மேலும் படிக்க | மாநில அளவிலான சிலம்பப் போட்டி...! பல்வேறு மாவட்டங்களில் இருந்து கலந்துக்கொண்ட மாணவர்கள்..!

கலந்துகொண்ட சிறுவர் சிறுமியர்களுக்கு வயது வாரியாக போட்டிகள் நடத்தப் படுகின்றது. போட்டிகளின் முடிவில் பெற்றோர்களுக்கான  போட்டிகள் நடைபெறவுள்ளது.இப்போட்டிகளில் வெற்றிபெறுபவர்களுக்கு இன்று மாலை பரிசுகள் வழங்கப்படுகின்றது.போட்டிகளை காங்கேயம் பகுதியை சேர்ந்த தமிழர் பாரம்பரிய கலை மன்றம் என்ற அமைப்பை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் ஒன்றினைந்து  நடத்திவருகின்றனர்.

தமிழர் பாரம்பரிய கலை மன்றத்தில் வருடம் முழுவதும் வள்ளி கும்மி ஆட்டம்,சலங்கை ஆட்டம்,ஒயிலாட்டம் போன்ற தமிழர்களின் பாரம்பரிய  கலை நிகழ்ச்சிகளும் கற்று தரப்படுகின்றது என்பது சிறப்பு.

இது போன்ற  விளையாட்டு போட்டிகள் விடுமுறை தினங்களில் நடைபெறுவதன்  மூலம் குழந்தைகளின்  உடல் ஆரோக்கியம் மேம்படுகிறது.மேலும்  மொபைல் போன் உட்பட கணிணி பயன்பாடும் குறையும்.  குழந்தைகள் நம்பிக்கையுடன் எதிர்காலத்தை வடிவமைக்க இந்த பாரம்பரிய விளையாட்டுகள் மிகவும்  பக்கபலமாக இருக்கும்.

மேலும் படிக்க | உலகக்கோப்பை கால்பந்து போட்டி...! ஆஸ்திரேலியா, அர்ஜெண்டினா அணிகள் வெற்றி...!