
நெல்லை | பாபநாசம் அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் தென் மாவட்டங்களின் பிரதான அணையான உச்ச நீர்மட்டம் 143 அடி கொண்ட பாபநாசம் காரையார் அணை உள்ளது. இந்த அணை தென்மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாய தேவைகளை தீர்க்கும் முக்கிய ஆதாரமாக திகழ்கிறது.
மேலும் படிக்க | 5,000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு...
இந்நிலையில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாலும், போதிய மழை இல்லாத காரணத்தினாலும் காரையார் அணைக்கு நீர்வரத்து கிடுகிடுவென குறைந்தது. மேலும் நீர்வரத்தை காட்டிலும், நீர்வெளியேற்றம் அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டமும் கிடுகிடுவென தொடர்ந்து குறைந்து வருகிறது.
அதாவது உச்ச நீர்மட்டம் 143 அடி கொண்ட காரையார் அணையில் நீர்மட்டம் சுமார் 110 அடி குறைந்து இன்று காலை நிலவரப்படி 32.9 அடியாக குறைந்துள்ளது. மேலும் அணைக்கு 88.73 கன அடி நீர்வரத்தும், அணையில் இருந்து 357.25 கன அடி நீர் வெளியேற்றமும் காணப்படுகிறது.
பிரதான அணையான பாபநாசம் காரையார் அணை நீர்மட்டம் தொடர்ந்து கிடுகிடுவென குறைவதால் கோடையை சமாளித்து குடிநீர் தட்டுப்பாடை நீக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மேலும் படிக்க | பார்வையாளர்களைக் கவரும் ஜகரண்டா மலர்கள்...