திருநள்ளாரில் சாமி தரிசனம் செய்த கர்நாடக அமைச்சர்...

திருநள்ளார் ஸ்ரீசனிபகவான் ஆலயத்தில் கர்நாடகா அமைச்சர் பசவராஜ் சாமி தரிசனம் செய்தார்.

திருநள்ளாரில் சாமி தரிசனம் செய்த கர்நாடக அமைச்சர்...

புதுச்சேரி | காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வர் சுவாமி தேவஸ்தானம் ஸ்ரீசனிபகவான் ஆலயத்தில்  கர்நாடகா நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் பசவராஜ்  சாமி தரிசனம் செய்தார்.

மேலும் 17ம்தேதி திருகணித பஞ்சாங்கம் படி மாலை 06.04 மணிக்கு மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனிப்பெயர்ச்சி அடைய உள்ளதாக தெரிவித்து இருந்தனர்.

மேலும் படிக்க | நீ நிலம் தரலானா நான் தண்ணீர் தரமாட்டேன்...ஏட்டிக்கு போட்டியாக நிற்கும் முதலமைச்சர்கள்...காரணம் என்ன?!!!

ஆனால் இவ்வாலயத்தில் திருக்கணித பஞ்சாங்கம் பின்பற்றப்படுவதில்லை எனவும் வாக்கிய பஞ்சாங்க முறைதான் பின்பற்றப்படும் அதன் படி இந்த ஆண்டு கடைசியில் மார்கழி மாதம் டிசம்பரில் தான் சனிப்பெயர்ச்சி அடைய உள்ளார் என்று ஆலய நிர்வாகம் முன்னே தெரிவித்திருந்தனர்.

எனினும் சேலம், பொள்ளாச்சி, கோயம்புத்தூர் மற்றும் வெளிமாநில பக்தர்கள் ஏராளமானோர் திருநள்ளாறு வந்து நளன் தீர்தத குளத்தில் புனித நீராடி  பின்னர் ஸ்ரீசனிபகவானை தரிசனம் செய்தனர் தொடர்ந்து எள் தீபம் ஏற்றி வழிபட்டனர்.

மேலும் படிக்க | ஏராளமான பக்தர்கள் பங்கேற்ற மகா கும்பாபிஷேகம்...