பாலசுப்பிரமணியன் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா...

புகழிமலை அருள்மிகு பாலசுப்பிரமணியன் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

பாலசுப்பிரமணியன் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா...

கரூர் மாவட்டத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான வேலாயுதம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள புகழிமலை அருள்மிகு பாலசுப்பிரமணியன் கோவிலில் 315 படிக்கட்டுகள் கொண்ட மலையாகும் மலை உச்சியில் மீது முருகப்பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது.

சங்ககாலத்திற்கு பின்பு சாமார்கள் இப்பகுதியில் வாழ்ந்து வந்தனர். சமணர்களுக்கு புகழிடம் தந்த காரணத்தினால் இந்த மலை புகழிமலை என்று அழைக்கப்பட்டதுவரலாற்று சிறப்புடைய  புகழிமலை கோவிலில் கும்பாபிஷே விழா நடைபெற்று 13 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில் இன்று மகா கும்பாபிஷே விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

கடந்த 23ஆம் தேதி திருவிழா தொடங்கியது தொடர்ந்து புனித திருத்தம் எடுத்தல், முளைப்பாரி எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சி நடைபெற்றது.

மேலும் படிக்க | கொடியேற்றத்துடன் தொடங்கிய பங்குனி உத்திர திருவிழா...

ஆலயம் அருகே சிவாசாரியார்கள் யாக குண்டங்கள் அமைத்து காவிரி ஆற்றில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித திருத்தத்திற்கு நான்கு காலையாக பூஜை நடைபெற்றது.

பின்னர் கோபுர கலசத்திற்கு உதிரி பூக்களால் நாமாவளிகள் கூறிய பிறகு தூப தீபங்கள் காண்பிக்கப்பட்டது. பின்னர் சிவாச்சாரியார் புனித திருத்தத்தை தலையில் சுமந்தவாறு கோவிலை சுற்றி வலம் வந்த பிறகு கோபுர கலசத்தை வந்தடைந்து, மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

கோபுர கலசத்திற்கு சந்தன பொட்டிட்டு வண்ண மாலைகள் அணிவித்து தீபம் காண்பிக்கப்பட்ட பிறகு பொதுமக்கள் மீது புனித திருத்தம் தெளிக்கப்பட்டதுபுகழிமலை முருகன் கோவிலில் கும்பாபிஷே விழாவை காண உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

பல்வேறு பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க | 25 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற கும்பாபிஷேகம்...