25 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற கும்பாபிஷேகம்...

பழமை வாய்ந்த திருவெண்டுறைநாதன் கோவில் 25 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் வெகுவிமர்சையாக நடத்தபட்டது.
25 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற கும்பாபிஷேகம்...

திருவாரூர் | மன்னார்குடி அருகே உள்ள திருவெண்டுதுறை நாதர் சுவாமி கோவில் கும்பாபிஷேகம் இன்று வெகு விமர்சையாக நடத்தப்பட்டது. மன்னார்குடி அருகே திருவெண்டுதுறையில் வேல் நெடுங்கண்ணி அம்பாள் உடனுறை வெண்டுறைநாத சுவாமி கோவில் உள்ளது.

பழமையான கோவில் புதுப்பிக்கப்பட்டு இன்று காலை 25 வருடங்களுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. கும்பாபிஷேகத்தை ஒட்டி நான்கு தினங்களாக யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டது. இன்று காலை யாகசாலையில் பூரணாகதி செய்யப்பட்டு கடம் புறப்பாடு நடத்தினர்.

புனித நீர் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கோபுர விமான கலசங்களில் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அதேபோல கோவிலின் அருகில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலின் கும்பாபிஷேகமும் நடத்தப்பட்டது. இரண்டு கோவில்களின் கும்பாபிஷேகம் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டதால் இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com