குண்டேரிப்பள்ளம் அணை முழு கொள்ளளவை எட்டியது...! பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை...!

குண்டேரிப்பள்ளம் அணை முழு கொள்ளளவை எட்டியது...! பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை...!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள  வனப்பகுதியில் குண்டேரி பள்ளம் அணை அமைந்துள்ளது. இந்த அணையில் தேக்கப்படும் தண்ணீர் வினோபா நகர், தோப்பூர், கொங்கர்பாளையம், மோதூர், வாணிபுத்தூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 2500 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறுகின்றன.

குண்டேரி பள்ளம் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான விளாங்கோம்பை, கம்பனூர், கடம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக  குண்டேரி பள்ளம் அணைக்கு நீர்வரத்து ஆனது அதிகரித்தது.

இந்த நிலையில் நேற்று இரவு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழை காரணமாக குண்டேரி பள்ளம் அணை தனது முழு கொள்ளளவான 42 அடியை எட்டியதால் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து அணைக்கு வரும் உபரிநீர் 2600 கன அடி முழுமையாக அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கரையோரம் வசிக்கும் மக்கள், பாதுகாப்பாகவும் எச்சரிக்கையுடனும் இருக்க பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.