இரண்டு நாட்களில் லட்ச கணக்கில் தங்கம்... அதிரடி பறிமுதல் செய்த அதிகாரிகள்...

திருச்சி விமான நிலையத்தில் தொடரும் தங்கம் கடத்தல் சம்பவங்களில், 2வது நாளாக 61 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இரண்டு நாட்களில் லட்ச கணக்கில் தங்கம்... அதிரடி பறிமுதல் செய்த அதிகாரிகள்...
Published on
Updated on
1 min read

திருச்சி விமான நிலையத்திற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள் அதிகளவு இயக்கப்பட்டுவரும் நிலையில் துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் பயணிகளை ஏற்றிக்கொண்டு இன்று இரவு திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்தது.

இந்த விமானத்தில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டதில் இளையான்குடியை சேர்ந்த இக்பால் என்பவர் ஆசனவாயில் மறைத்து கொண்டு வந்த 907 கிராம் தங்கத்தையும், அதேபோன்று கும்பகோணத்தைச் சேர்ந்த இருவர் கட்டிங் பிளேயர் மற்றும் 3 -பின் சாக்கெட்டில் மற்றும் படுக்கை விரிப்பில் மறைத்து எடுத்து வந்த 277 கிராம் தங்கத்தையும் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட 1 கிலோ 184 கிராம் எடையுள்ள தங்கத்தின் சந்தை மதிப்பு சுமார் 61 லட்சமாகும், தொடர்ந்து தங்கம் கடத்தி வந்த மூன்று பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேற்றைய தினம் துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட 51 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் இன்று மீண்டும் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால், திருச்சி விமான நிலையம் தற்போது வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வரும் மையமாகவே மாறிவரும் நிலை உருவாகி வருகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com