மீண்டும் கல்லூரிக்கு போகலாம், நம்மை நாம் அங்கே தேடலாம் ...ஜோராக நடந்த ரியூனியன் 

மீண்டும் கல்லூரிக்கு போகலாம், நம்மை நாம் அங்கே தேடலாம் ...ஜோராக நடந்த ரியூனியன் 

சேலம் அரசு பொறியியல் அரசு கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்கள் 32 ஆண்டுகளுக்கு பின்னர் புதுச்சேரியில் ஒன்று கூடி தங்களின் கல்லூரி நினைவுகளை தங்களது குடும்பத்தினருடன் பகிர்ந்து கொண்டாட்டம்

  

சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் கடந்த 1986 ஆம் ஆண்டு முதல் 1990 ஆம் ஆண்டு வரை படித்த முன்னாள் மாணவர்கள் பல்வேறு வெளிநாடு மற்றும் பல்வேறு மாநிலங்களில்  இருந்து தொழில் ரீதியாக பணி புரிந்து வருகின்றனர்.இந்நிலையில் கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் மீண்டும் சந்திக்கும் வகையில் வாட்ஸ் அப் குழு அமைத்து அதன் மூலம் அமெரிக்கா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலத்தில் இருந்த முன்னாள் மாணவர்கள் ஒன்றினைந்து அவர் அவர் குடும்பகளுடன் இன்று புதுச்சேரியில் உள்ள தனியார் விடுதியில் 100 க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர். 

 மேலும் தங்களது குடும்பத்தினருடன் இணைந்து பழைய கல்லூரி நியாபகங்களை பகிர்ந்துக்கொண்டு ஆடி பாடி மகிழ்ந்தனர்.32 வருடங்களுக்கு பின் இவ்வாறு அனைத்து நண்பர்களையும்,  ஒன்றாக படித்த மாணவர்களையும் பார்ப்பது மனதிற்கு மிகவும் ஆனந்தமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.மேலும் இப்போது நிலவும் இந்த கடுமையான வாழ்க்கை முறையில் இத்தகைய வாய்ப்பு கிடைத்தது மிக பெரிய பொக்கிஷம் என கூறியுள்ளனர்.விழாவில் பழங்கால நினைவுகளை நியாபகம் கூறும் வகையில் பரதநாட்டியம் அரங்கேறியது .