அகல் விளக்கு ஜோதியில் ஒளிரப்  போகும் வடபழனி பழனி ஆண்டவர்...

அகல் விளக்கு ஜோதியில் ஒளிரப்  போகும் வடபழனி பழனி ஆண்டவர்...
Published on
Updated on
2 min read

தீப திருநாளையொட்டி 8000 அகல் மின் விளக்குகள் ஒளிவெள்ளத்தில் ஜொலிக்க போகும் வடபழனி ஆண்டவர் திருக்கோயில்.

8000 மின் விளக்குகள் :

  சென்னையில் புகழ் பெற்ற வடபழனி பழனி ஆண்டவர் திருக்கோயிலில் ஒவ்வொரு வருடமும் கார்த்திகை தீபத்திருவிழா  மிகவும் கோலாகலமாக விளக்குகள் ஏற்றி ஜெகஜோதியாக கொண்டாடப்படும்.அதேபோல் இந்த வருடமும்  வரும் டிசம்பர் 5, 6, 7ஆம் தேதிகளில் மூலவர் சந்நிதி சுற்றுச்சுவர் முழுவதிலும் அகல் விளக்குகளை போன்று 8 ஆயிரம் மின் விளக்குகளை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட உள்ளது . இதற்காக மின் விளக்குகள் பொருத்தும் பணிகள் கோயிலில் உற்சாகத்துடன் துவங்கி உள்ளது.

செண்பக மலர்களால் அலங்காரம் :

அதேபோல் வள்ளி தேவசேனா சந்நிதி எதிரில் 108 குத்து விளக்குகள்  அலங்காரம் ஏற்றப்பட உள்ளது.தீபத்திருநாளன்று மூலவர் பழனி ஆண்டவருக்கு சிறப்பு  அபிஷேக வழிபாடுகள் செய்யப்பட்டு செண்பக மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருக்கோலத்தில் பழனி ஆண்டவர் பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.தீபத்திருநாளை முன்னிட்டு வடபழனி ஆண்டவர் கோயில் விழா கோலம் பூண்டுள்ளது.

பத்தர்களுக்கு வேண்டிய குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் எல்.ஆதிமூலம், துணை ஆணையர் முல்லை உள்ளிட்ட செய்து வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com