பொது பணிகளுக்கு மத்தியில் விவசாயம் செய்யும் எம்.எல்.ஏ....!!!

பொது பணிகளுக்கு மத்தியில் விவசாயம் செய்யும் எம்.எல்.ஏ....!!!

சம்பா அறுவடை முடிவுற்ற நிலையில் தனது நிலத்தில் நவரை பட்டம் உழவு பணியை மேற்கொண்டுள்ளார் ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தொகுதி எம்எல்ஏவாக உள்ளவர் கண்ணன்.   இவர் தொகுதிக்கு தேவையான மக்களின் அடிப்படை வசதிகளை பெற்று தருவதில் பெரும் பங்கு ஆற்றி வருகிறார்.  இதன் மூலம் பல்வேறு கிராமப்புற பகுதிகளில் சாலை போடுவது, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைப்பது, பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் அமைக்க என பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி துவக்கி வைத்து வருகிறார். 

இவ்வளவு பணி சுமைகள் மத்தியிலும் தனது விவசாய நிலங்களுக்கு சென்று விவசாய பணியும் மேற்கொள்வது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.  தற்போது சம்பா சாகுபடி அறுவடை பணிகள் முடிவுற்ற நிலையில் மோட்டார் பாசனம் மூலம் தண்ணீர் கிடைக்கப்பெற்று நவரை பட்டம் நெல் நடவு பணியினை துவங்க உள்ளனர்.

இந்த பணியை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் அவரது சொந்த ஊரான கண்டியங்கொல்லை கிராமத்தில் உள்ள வயலில் துவங்கி உள்ளார்.  தற்போது நவரை பட்டம் சாகுபடியை முன்னிட்டு டிராக்டர் மூலம் உழவு செய்யும் பணியில் ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் ஈடுபட்டுள்ளார்.

இதையும் படிக்க:    மெகா ஸ்கிரீனில் பண்டைய விளையாட்டுகள்... விளையாடி மகிழும் மாணவர்கள்!!!