ஐந்து பெரும் கோவில்களில் நடத்தப்படும் மகா சிவராத்திரி விழா...

தமிழ்நாடு முழுவதும் ஐந்து கோயிலில் மஹா சிவராத்திரி விழா நடத்தப்படுவதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார்.
ஐந்து பெரும் கோவில்களில் நடத்தப்படும் மகா சிவராத்திரி விழா...
Published on
Updated on
1 min read

வருகிற பிப்ரவரி மாதம் 18ம் தேதி மகாசிவராத்திரி வரவுள்ளது. சிவ பெருமானுக்கு மிகவும் விசேசஹமான இந்த் அனாளன்று பல சிவன் கோவில்களில் சிறப்பு பூஜைகளும் அன்னதானங்களும், அபிஷேனக்களும் நடைபெறுவது வழக்கம்.

இதனைத் தொடர்ந்து, தஞ்சை பெரிய கோவிலில் மகா சிவராத்திரியை விழா நடைபெறுவதற்கான இடம் தேர்வு குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆய்வு மேற்கொண்டார்.

இது குறித்து பேசிய போது, தஞ்சை பெரிய கோவில் அருகே உள்ள திலகர் திடலில் சிவராத்திரி விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தமிழகம் முழுவதும் தஞ்சை பெரிய கோவில், கோவை பட்டீஸ்வரர் கோயில், நெல்லையப்பர் கோவில் உள்ளிட்ட ஐந்து கோவில்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி, இந்த கோவில்களில் நடைபெறும் சிவராத்திரி விழா, அந்தந்த கோவில் சார்பிலே நடத்தப்படுவதாகவும் தவிர அறநிலையத்துறை சார்பில் தமிழ்நாடு அரசு சார்பிலோ நடத்தப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். மேலும் இது குறித்து மேலும் பேசியது குறிப்பிடத்தக்கது.

தஞ்சை பெரிய கோவிலுக்கு யானை வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. காட்டில் இருந்து யானையைக் கொண்டு வந்து வளர்க்கக்கூடாது. இதற்கு உபயதாரர்கள் யாரேனும் யானை நன்கொடையாக வழங்க முன் வந்தால் அதனை ஏற்றுக் கொள்ள தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

கிராம கோவில்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் என்று இருந்த நிதி ஒதுக்கீடு இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 2 லட்சம் ஆக உயர்த்தப்பட்டது. ஏற்கனவே ஆயிரம் திருக்கோவில்களுக்கு தருகிறோம் என்று கூறியிருந்ததை தற்போது 2,500 கோவில்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து ஜாதியினரும் அச்சராகலாம் திட்டத்தின் மூலம் தற்போது வரை 40 அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com