மின்சார ரயிலில் அடிப்பட்டு உயிரிழந்த நபர்...! அடையாளம் தெரியாமல் விசாரித்து வரும் போலீசார்...!

மின்சார ரயிலில் அடிப்பட்டு உயிரிழந்த நபர்...! அடையாளம் தெரியாமல் விசாரித்து வரும் போலீசார்...!

சென்னையில் ஓடும் மின்சார ரயிலில் அடிப்பட்டு 40 வயது மதிக்கதக்க நபர் உயிரிழந்துள்ள சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி சென்ற மின்சார ரயிலில் அடிப்பட்டு ஒருவர் உயிரிழந்ததாக ரயில் ஓட்டுநர் மூலம் எழும்பூர் ரயில் நிலைய மேலாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் அடிப்படையில் எழும்பூர் ரயில்வே போலீசார் சம்பவம் இடத்திற்குச் சென்று ஓடும் ரயிலில் அடிபட்டு இறந்தவரின் உடலை மீட்டனர். 

லுங்கி மற்றும் சட்டை அணிந்த நிலையில் சடலமாக இருந்தவர் யார் என்ற அடையாளம் தெரியாத நிலையில், அவரது பாக்கெட்டில் இருந்து செல்போன் ஒன்றை மட்டும் ரயில்வே போலீசார் மீட்டனர். அதனைத் தொடர்ந்து பிரேதப் பரிசோதனைக்காக அவரின் உடலை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தில் இறந்த நபரை அடையாளம் காணும் நோக்கில் எழும்பூர் ரயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிக்க : 100 க்கும் மேறப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் கூடிய போராட்டம்...