பிச்சைக்காரரை செருப்பால் அடித்த நகைக் கடை ஓனர்... வைரல் வீடியோ...

வயதான பிச்சைக்காரரை ஒருவர் காலணியால் தாக்கும் கொடூர சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிச்சைக்காரரை செருப்பால் அடித்த நகைக் கடை ஓனர்... வைரல் வீடியோ...

கன்னியாகுமரி  | தொடர்ந்து பல வகையான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அனைவரையும் கவலையில் ஆழ்த்தி வருகின்றன. இந்நிலையில், மேலும் ஒரு சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

குலசேகரம் பகுதியில் இயங்கி வரும் நகைக்கடை ஒன்றில் வயதான பிச்சைக்காரர் ஒருவர் யாசகம் கேட்டு சென்றுள்ளார். அப்போது திடீரென பின்னால் இருந்து ஓடி வந்த நகைக்கடை உரிமையாளர் ராஜா என்பவர் தனது காலணியை எடுத்து பிச்சைக்காரரின் பின் தலையில் தாக்கியதுடன் கேவலமாக திட்டியதாகவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க | ’சில்வண்டு சிக்கும் சிறுத்த சிக்காது’ சிறுத்தையை பிடிக்க திணறும் அதிகாரிகள்...!

இந்த கொடூர தாக்குதலின் காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவிலும் பதிவாகி இருந்தது.அந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளதுடன் இந்த தாக்குதலுக்கு பொதுமக்களும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

ஒருவர் தங்களது இயலாமையின் காரணமாக தான் யாசகம் கேட்டு வருகின்றனர். அவர்களிடம் நம்மால் முடிந்த உதவி செய்யாவிட்டாலும், அவர்களை புண்படுத்தாமல் போனாலே போதுமானது. இதைத் தவிர்த்து விட்டு, இது போன்ற கீழ்த்தரமான காரியங்கள் செய்வதால், மனிதம் மீதான நம்பிக்கையே குறைகிறது என்பது தான் இப்போதைய அவல நிலையாக இருக்கிறது.

--- பூஜா ராமகிருஷ்ணன்

மேலும் படிக்க | கழிவுநீர் கால்வாயில் விழுந்த சிறுவன் மீட்பு...