சூரியகிரகணத்தை ஒட்டி சாத்தப்படும் மீனாட்சியம்மன் திருக்கோவில்...

இன்று சூரிய கிரகணம் நடைபெறுவதால் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நடை சாத்தப்படுகிறது.

சூரியகிரகணத்தை ஒட்டி சாத்தப்படும் மீனாட்சியம்மன் திருக்கோவில்...

இன்று சூரிய கிரகணம் என்பதால் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நடை காலை 11.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை சாத்தப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இன்று சூரியகிரகணம் மாலை 5.23 மணிக்கு தொடங்கி 6.23 மணிக்கு முடிவடைய உள்ள நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் மற்றும் அதன் 22 உபகோயில்களில் நாளை நடை சாத்தப்படுகிறது.

மேலும் படிக்க | அக்டோபர் 25 பகுதி சூரிய கிரகணம் - வானில் ஒரு தீபாவளி !

மீனாட்சி அம்மன் கோவிலில் காலசந்தி பூஜை காலத்தில், உச்சிகாலம் மற்றும் சாயரட்சை ஆகிய பூஜைகள் நடைபெற்று கோவில் நடை காலை 11.00 மணி முதல் இரவு 7. 00 மணி வரை சாத்தபடுவதால் பொது மக்கள் குறிப்பிட்ட நேரத்தில் அர்ச்சனை செய்யவோ, தரிசனம் செய்யவோ அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கோலாட்ட உற்சவம், சாமி புறப்பாடு நாளை ஒரு நாள் மட்டும் இரவு 07.00 மணிக்குப் பின் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | தீபாவளி: வாகனங்களால் திக்கித் திணறும் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை...!