போட்டியால் ஏற்பட்ட பரிதாபம்... மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவிகள்...

உதகை நகராட்சி உருது பள்ளியில் போட்டி போட்டுக் கொண்டு அதிக சத்து மாத்திரைகளை உட்கொண்ட 4 மாணவிகள் மயக்கம் அடைந்தனர்.

போட்டியால் ஏற்பட்ட பரிதாபம்... மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவிகள்...

நீலகிரி | உதகை காந்தல்  பகுதியில் நகராட்சிக்கு நிர்வாகத்திற்கு சொந்தமான உருது நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 249 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

தமிழக அரசு சுகாதாரத்துறை மூலம் குழந்தைகளுக்கு இரும்பு மற்றும் போலிக் சத்து  ஊட்டச்சத்து மாத்திரைகள் ஒருநாளைக்கு ஒரு மாத்திரை வீதம் வழங்கப்படுகிறது. இந்தநிலையில் நகராட்சி பள்ளியில்  குழந்தைகளிடம் சத்து மாத்திரை இன்று  வழங்கப்பட்டது.

மேலும் படி்க்க | கோவை: மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரம் - ஆட்சியருக்கு அனுப்பப்பட்ட கடிதம்!

அப்போது 8-ம் வகுப்பு படிக்கும் 4 மாணவிகளிடையே யார் அதிகமாக ஊட்டச்சத்து மாத்திரை உட்கொள்வது என ஏற்பட்ட போட்டியில் அதிக மாத்திரையை சாப்பிட்ட 4 மாணவிகளுக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் தற்போது கோவை அரசு மருத்துவமனைக்கு  மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

இது குறித்து மருத்துவமனை டீன் மனோகரி தலைமையில் விசாரணை மேற் கொள்ளப் பட்டு வருகிறது. மாணவிகளுக்கு  மொத்தமாக  சத்து மாத்திரைகள்  ஏன் வழங்கப்பட்டது என்று விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் படி்க்க | சமூக ஆர்வலருக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி 10ரூபாய் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்...