வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் குரங்குகள் தொல்லை...பொதுமக்கள் அவதி...!

வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் குரங்குகள் தொல்லை...பொதுமக்கள் அவதி...!

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர், 73 ஊராட்சிகளைக் கொண்ட தமிழகத்தில் மிகப்பெரிய ஒன்றியமாகும். இந்த 73 ஊராட்சிகளை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களுடைய ஊராட்சி தொடர்பான அனைத்து தேவைகளுக்கும் உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு தான் வரவேண்டும்.

இந்த நிலையில் இந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை சுற்றி நூற்றுக்கணக்கான குரங்குகள் வசித்து வருகிறது. இந்த அலுவலகத்திற்கு வரும் வாகனங்களில் உள்ள பொருட்கள் மற்றும் ஆவணங்கள் ஆகியவற்றை இந்த குரங்குகள் எடுத்து சென்று கடித்து குதறி வருகிறது.குரங்குகளிடமிருந்து அதனை மீட்க முயற்சிக்கும் பொதுமக்களை குரங்குகள் அச்சுறுத்தியும் வருகிறது. இங்கு பணியாற்றும் அரசு ஊழியர்களின் உணவு பையயும், முக்கிய ஆவணங்கள் மற்றும் பொருட்களையும் தூக்கிச் சென்று விடுகிறது.

இதனால் இந்த அலுவலகத்தில் பணியாற்றும் பணியாளர்கள், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கும், அச்சத்திற்கும் உள்ளாகி வருகின்றனர். எனவே வனத்துறை இந்த குரங்குகளை பிடித்து வேறு இடத்தில் விடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிக்க : அழகு சாதன பொருட்களில் தங்கம் கடத்திய பயணிகள்...! பறிமுதல் செய்த அதிகாரிகள்...!