சென்னை மாநகராட்சியில் 100க்கும் மேற்பட்டோர் ரூ.4000 கோடி வரிபாக்கி!

சென்னை மாநகராட்சியில் 100க்கும் மேற்பட்டோர் ரூ.4000 கோடி வரிபாக்கி!

சென்னையில் 100க்கும் மேற்பட்டோர் 4000 கோடி ரூபாய் வரை வரி பாக்கி வைத்துள்ளனர் என சென்னை துணை மேயர் மகேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை தியாகராய நகரில்131 கோடியில் புதிதாக  கட்டப்பட்டு வரும் புதிய வடிவிலான மேம்பாலத்தை சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார் ஆய்வு மேற்கொண்டார்.

சிஐடி நகர் முதல் பிரதான சாலையில் தற்போதுள்ள தெற்கு உஸ்மான் சாலை மேம்பாலத்தின் சாய்வுதளப் பகுதியிலிருந்து சி.ஐ.டி நகர் 4வது பிரதான சாலை சந்திப்பை இணைக்கும் வகையில் மேம்பாலம் கட்டப்பட்டுவருகிறது. இம்மேம்பாலத்திலிருந்து பர்கிட் சாலை சந்திப்பை அடைய ஏற்ற இறக்கத்திற்கான சாய்வுதள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ் குமார் கூறுகையில், போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கக்கூடிய  தியாகராய நகர் பகுதியில் பொதுமக்களுக்கு எந்த ஒரு இடையூறும் இல்லாத வகையில் புதிய டெக்னாலஜியை பயன்படுத்தி சென்னை மாநகராட்சி சார்பில் கட்டப்பட்டு வருக்கிறது. இந்த மேம்பாலம் கட்டுவதற்கான கால ஒப்பந்தம் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை  இருந்தால் கூட அதனை விரைந்து முடிக்க மாநகராட்சி சார்பில் வலியுறுத்துகின்றோம்.

குறிப்பாக வருகின்ற தீபாவளி, பொங்கல் பண்டிகை காலங்களில் கூட்டநேரிசல்,போக்குவரத்து இடையூறு இருக்கும் பட்சத்தில் அதனை விரைந்து முடிக்க  வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கைகளை கவனத்தில் கொண்டு முடிக்கவுள்ளோம்.

2.3 கிலோ மீட்டருக்கு தி.நகரில் உள்ள மேம்பாலமும் சி.ஐ. டியில் கட்டக்கூடிய 1.2 கிலோ மீட்டர் மேம்பாலமும் இணைக்கும் வகையில் கட்டப்படுகிறது. பொதுவாக மேம்பாலத்திற்கு அடியில் நடைபாதை வியாபாரிகள் கடை வைப்பதற்கு தடைவிதித்துள்ளோம் அதை மீறுவோர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றோம் என தெரிவித்தார். 

மேலும், "சென்னை மாநகராட்சி முழுவதும் இருக்கக்கூடிய தனியார் கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தனியார் கட்டிடங்கள் (malls) போன்றவற்றை முறைகேடாக கட்டியிருப்பதாக         சென்னை மாநகராட்சிக்கு புகார் வந்துள்ளது. அதன் அடிப்படையில் அவற்றை மறுஆய்வு செய்யவேண்டும் என்று மாநகராட்சி ஆணையர்யிடமும், வருவாய் துறை ஆணையர்யிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளோம்.

100க்கும் மேற்பட்டோர் 4000 கோடி ரூபாய் வரை வரி பாக்கி வைத்துள்ளனர். சிலர் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ளதால் அதனை திரும்ப பெற வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். வரி செலுத்தாதவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் செலுத்தாதவர்களில் ஏழைகளை பாதிக்காத வகையில் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்" எனக் கூறினார்.

இதையும் படிக்க|| "ஈஷா யோகா மையம் தொடங்க அனுமதி பெறவில்லை" தமிழ்நாடு அரசு தகவல்!