500க்கும் மேற்பட்ட தம்பதிகள் பங்கேற்ற விசேஷ பூஜை...

தருமபுரத்தில் நடைபெற்ற சத்யநாராயணா பூஜையில் 500க்கும் மேற்பட்ட தம்பதிகள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
500க்கும் மேற்பட்ட தம்பதிகள் பங்கேற்ற விசேஷ பூஜை...
Published on
Updated on
1 min read

மயிலாடுதுறை | மயிலாடுதுறை அடுத்த தருமபுரம் ஆதீனத்தின் பசு மடத்தில் தமிழ் பாதுகாப்பு சங்கம் சார்பில் சத்திய நாராயணர் பூஜை நடைபெற்றது. பெண்கள் கணவனுடன் தீர்க்க சுமங்கலியாக இருக்க வேண்டி பூஜை நடைபெற்றது.

இந்த பூஜையில் 500க்கும் மேற்பட்ட தம்பதியினர் பங்கேற்று, கும்ப கலசங்களை வைத்து சத்ய நாராயணர் படத்திற்கு பூஜைகள் மேற்கொண்டனர். இதில், அன்பே சிவம் அறக்கட்டளை நிறுவனர் பாலச்சந்திர சிவாச்சாரியார் மந்திரங்களை சொல்லச் சொல்ல தம்பதிகள் அவற்றிற்கு ஏற்ப பூஜைகளை மேற்கொண்டனர்.

தொடர்ந்து, விநாயகர் பூஜை சத்யநாராயணா பூஜை, ஆகியவையும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. தருமபுரம் ஆதீன கட்டளை தம்புரான் சுவாமிகள், வீரராகவ ஜீயர் சுவாமிகள், இந்து அமைப்பு சேர்ந்தவர்கள் ஏராளமானோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com