6 லட்சத்திற்கும் மேல் பயனடையப் போகும் பொதுமக்கள் - சென்னை குடிநீர் வாரியம் அறிவிப்பு

6 லட்சத்திற்கும் மேல் பயனடையப் போகும் பொதுமக்கள் - சென்னை குடிநீர் வாரியம் அறிவிப்பு

சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட விரிவாக்கப்பட்ட பகுதிகளில் ரூ.866.34 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. 

பாதாள சாக்கடை வசதி இல்லாத இடங்களுக்கு குறிப்பாக பெருநகர சென்னை மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட விரிவாக்கப்பட்ட பகுதிகளுக்கு பாதாள சாக்கடை அமைக்கும் பணிகளை சென்னைக் குடிநீர் வாரியம் மேற்கொண்டு வருகிறது.

மேலும் படிக்க | மலத்தை அள்ளி வீசியும் தன் சேவையை தொடர்ந்து செய்த இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் சாவித்ரி பாய் பூலே.. !

அந்த வகையில், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மணலி மண்டலத்தில் 83 கோடியே 49 லட்சம் மதிப்பீட்டிலும், அம்பத்தூர் மண்டலத்தில் 18 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டிலும், வளரவாக்கம் மண்டலத்தில் 267 கோடியே 7 லட்சம் மதிப்பீட்டிலும், ஆலந்தூர் மண்டலத்தில் 155 கோடியே 66 லட்சம் மதிப்பீட்டிலும், பெருங்குடி மண்டலத்தில் 341 கோடியே 62 லட்சம் மதீப்பீட்டில் என மொத்தம் 866 கோடியே 34 லட்சம் மதிப்பீட்டில் பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் நடைப்பெற்று வருகிறது. 

இந்த பணிகள் மூலம் 59 ஆயிரத்து 446 வீடுகளுக்கு கழிவுநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு 6 இலட்சத்து 2 ஆயிரத்து 799 பொதுமக்கள் பயன் பெறவுள்ளனர்.

மேலும் படிக்க | தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம்..! விவாதங்கள் என்ன?