மாயமான கல்லூரி மாணவிகள்!!என்ன ஆனது என்று கண்கலங்கும் பெற்றோர்கள்...

மாயமான கல்லூரி மாணவிகள்!!என்ன ஆனது என்று கண்கலங்கும் பெற்றோர்கள்...

சாத்தான்குளத்தில் கல்லூரி மாணவிகள் மாயமானதால் பரபரப்பு,சாத்தான்குளம் காவல்துறை தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது.இந்த கல்லூரியில் சாத்தான்குளம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 1400 க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர்.இந்த கல்லூரியில் பி.ஏ ஆங்கிலம் மூன்றாம் ஆண்டு படிக்கும் கார்த்திகா மற்றும் ஹெப்சிபா செல்வகுமாரி ஆகிய இருவரும் தோழிகள் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 23ஆம் தேதி மதியம் பண்டாரபுரத்தை சேர்ந்த அச்சுதன் என்பவரது மகள் கார்த்திகா மற்றும் தட்டார்மடம் அருகே உள்ள கொழுந்தட்டு பகுதியை சேர்ந்த ராபர்ட் செல்வன் என்பவரது மகள் ஹெப்சிபா செல்வகுமாரி ஆகிய இருவரும் கார்த்திகாவின் வீட்டிலிருந்து வங்கிக்கு செல்வதாக கூறி சென்றுள்ளனர்.

தனது ஊருக்கு அருகில் உள்ள முன்னாள் கல்லூரி தோழி ஒருவரை செல்போனில் தொடர்பு கொண்டு அவரது இருசக்கர வாகனத்தில் சென்று சாத்தான்குளம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அருகே இறங்கியுள்ளனர். பின்னர் நீண்ட நேரம் ஆகியும் தங்களது மகள் வீட்டிற்கு திரும்பவில்லை என்று கூறி கார்த்திகாவின் தந்தை அச்சுதன் என்பவர் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

சாத்தான்குளம் காவல்துறையினர் அவர்களது செல்போன் என்னை தொடர்பு கொண்ட போது அதை சுவிட்ச் ஆப்பில் இருப்பதாக கூறப்படுகிறது.கல்லூரி மாணவிகள் இருவர் மாயமானது சாத்தான்குளம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தங்களது மகள் எங்கே சென்றாள்? எப்படி இருக்கிறாள்? அவர்களுக்கு என்ன ஆனது என்று மாணவிகளின் பெற்றோர் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.மாயமான கல்லூரி மாணவிகள் எங்கு இருக்கிறார்கள் என்பது குறித்து சாத்தான்குளம் காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.