அசால்ட்டாக இரு சக்கர வாகனத்தில் உள்ள பணத்தை திருடி செல்லும் மர்ம நபர்கள்...! வெளியான சிசிடிவி...!

அசால்ட்டாக இரு சக்கர வாகனத்தில் உள்ள பணத்தை திருடி செல்லும் மர்ம நபர்கள்...! வெளியான சிசிடிவி...!

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள கண்டமத்தான் கிராமத்தை சேர்ந்தவர் குமரேசன். இவர் கண்ட மத்தான் கிராமத்தில் மளிகை கடை நடத்தி வருகிறார். தீபாவளியை முன்னிட்டு மளிகை கடைக்கு மளிகை பொருட்கள் வாங்க ராமநத்தம் வந்துள்ளார். ராமநத்தம் தேசிய நெடுஞ்சாலை அருகிலுள்ள ஏடிஎம்மில் இருந்து அறுபதாயிரம் ரூபாயை எடுத்து தனது இரு சக்கர வாகனத்தில் வைத்து கொண்டு அப்பகுதியில் உள்ள ஒரு கடையின் முன்பு தனது வாகனத்தை நிறுத்தி  விட்டு சென்றுள்ளார். அப்போது இரண்டு மர்மநபர்கள் பின் தொடர்ந்து வந்து பூட்டிய வாகனத்தில் இருந்த அறுபதாயிரம் ரூபாயை  திருடிச் சென்றுள்ளனர்.  திருடும் சிசிடிவி காட்சிகளை வைத்து ராமநத்தம் போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.