நாமக்கல் பட்டாசு வெடி விபத்து - 2 லட்சம் நிதியுதவி முதலமைச்சர்

நாமக்கல் பட்டாசு வெடி  விபத்து -   2 லட்சம் நிதியுதவி முதலமைச்சர்

பட்டாசு வெடி விபத்தில் 

நாமக்கல் மாவட்டம், மோகனூரில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் இன்று காலை திடீரென வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் வீடு முழுவதும் தரைமட்டமாகியது. இதுகுறித்து தகவல் அறிந்து தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுப்பட்டனர். தீயை கடும் போராட்டத்துக்குப் பிறகு கட்டுக்குள் கொண்டு வந்ததை அடுத்து, உள்ளே சிக்கி இருந்தவர்களை மீட்டனர். இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயா மூதாட்டி உட்பட  4 பேர் உயிரிழந்தனர். மேலும், 5 பேர் படுகாயமடைந்தனர் எனக் கூறப்படுகிறது.

நிவாரண நிதி - 2 லட்சம் வழங்கல்

நாமக்கல் மாவட்டம் பட்டாசு வெடிவிபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி வழங்கினார்  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

 நாமக்கல் மாவட்டம் மோகனூர் வட்டம் மற்றும் கிராமம் மேட்டுத்தெரு  பகுதியில் இன்று அதிகாலையில் அனுமதியின்றி வைத்திருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறிய விபத்தில் திரு. தில்லைக்குமார் திருமதி .பிரியா திருமதி. செல்வி திருமதி .பெரியக்கள் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினை கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன் இவ்விபத்தில் காயமுற்றவர்களுக்கு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

 உயிரழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதல்களையும் தெரிவித்துகொள்வதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூபாய் இரண்டு இலட்சமும் மற்றும் காயமுற்றவர்களுக்கு தலா ஐம்பதாயிரமும்  முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன் என தமிழக அரசிடமிருந்து உத்தரவு வெளியாகியுள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com