இயற்கை பேரிடர் குறித்த விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி...

இயற்கை பேரிடர் காலங்களில் பொது மக்களை மீட்பது குறித்த விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி திருவண்ணாமலை ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்றது.

இயற்கை பேரிடர் குறித்த விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி...

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புயல், வெள்ளம், கட்டிட இடிபாடுகள், பூகம்பம் உள்ளிட்ட பல்வேறு பேரிடர் காலங்களில் விபத்தில் சிக்கிக்கொண்ட பொதுமக்களை எவ்வாறு மீட்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரிடர் மேலாண்மை படையினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விழிப்புணர்வு ஒத்திகை நடத்தினர்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியில் இருந்து 25 நபர்கள் கொண்ட பேரிடர் மேலாண்மை படையினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் முன்னிலையில் பேரிடர் காலங்களில் பொதுமக்கள் சிக்கிக்கொண்டால் அவர்களை எவ்வாறு மீட்க வேண்டும் என்ற ஒத்திகையை செய்து காட்டினார்.

மேலும் படிக்க | ஸ்ரீரங்கம் கோவிலில் தீவிரவாத தடுப்பு நடவடிக்கை ஒத்திகை...

குறிப்பாக பெரிய கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டால் கட்டிட சுவற்றை தலையிட்டு உள்ளே சிக்கிக் கொண்ட பொதுமக்களை எவ்வாறு மீட்க வேண்டும் என்றும், கட்டிடங்களில் மேல் தளத்திலிருந்து பொதுமக்களை கயிற்றின் மூலம் எவ்வாறு மீட்க வேண்டும் என்றும், அவர்களை மீட்ட பின்னர் அவர்களுக்கு மருத்து முதல் உதவி சிகிச்சை எவ்வாறு அளிக்க வேண்டும் என்று பல்வேறு ஒத்திகை நிகழ்ச்சிகளை செய்து காட்டினார்.

இது போன்ற விபத்துக்கள் நடைபெற்றால் பொதுமக்கள் விழிப்புடன் இருந்து கட்டிடங்களில் சிக்கியுள்ளவர்களையும், தீ விபத்தில் சிக்கிக் கொண்டவர்களை எவ்வாறு மீட்க வேண்டும் எனவும் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

மேலும் படிக்க | அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை நடத்திய அதிகாரிகள்...