ஊத்தங்கரையில் புதிய வழித்தட நீட்டிப்பு விழா... அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பங்கேற்பு...

உத்தங்கரை பகுதியில் புதிய வழித்தட நீட்டிப்பு விழா நடைபெற்றது. இதில், போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பங்கேற்றார்.
ஊத்தங்கரையில் புதிய வழித்தட நீட்டிப்பு விழா... அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பங்கேற்பு...
Published on
Updated on
1 min read

கிருஷ்ணகிரி | ஊத்தங்கரை பகுதிகளில் உள்ள கொண்டம்பட்டி, நடுப்பட்டி, நல்லவன்பட்டி புதூர், கொண்டம்பட்டி, ஊத்தங்கரை பேரூராட்சியில் உள்ள தாண்டியப்பனூர், வண்டிக்காரன் கொட்டாய், பாரதிபுரம், போன்ற குக்கிராமங்களுக்கு புதிய வழித்தட பேருந்து நீட்டிப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர்,மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் டி. மதியழகன் ஆகியோர் கலந்து கொண்டு புதிய போக்குவரத்து வழித்தடங்களை பச்சை கொடியற்றி தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் உஷாராணி குமரேசன், தமிழ்நாடு மகளிர் ஆணைய உறுப்பினர் டாக்டர் மாலதி நாராயணசாமி, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ரஜினி செல்வம், பேரூராட்சித் தலைவர் அமானுல்லா, நகரச் செயலாளர் பாபு சிவகுமார், அவைத்தலைவர்  தணிகை குமரன், போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகத்தினர் மற்றும் திமுக கட்சியைச் சார்ந்த 500 க்கும் மேற்பட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com