பழனி தேவஸ்தான நிர்வாகத்திற்கு நோட்டீஸ் ...

கோயில் தேவஸ்தான கட்டிடங்களுக்கு அனுமதி பெறப்பட்டுள்ளதா என ஆய்வு செய்ய, கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பழனி தேவஸ்தான நிர்வாகத்திற்கு நோட்டீஸ் ...
Published on
Updated on
1 min read

திண்டுக்கல் | அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனிக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வந்து செல்கின்றனர். தைப்பூசம், பங்குனி உத்திரம் என்ற விசேஷ நாட்களில் லட்சக்கணத்தில் பக்தர்கள் வந்து செய்கின்றனர்.

இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் தேவஸ்தான நிர்வாகம்  பக்தர்கள் தேவையான வசதிகளை செய்து வருகிறது. இந்த நிலையில் மலை அடிவாரத்தில் உள்ள கிரிவலப் பாதை, பூங்கா ரோடு, ரயில் நிலைய சாலை என பழனியில் பல இடங்களில் தேவஸ்தானத்திற்கு சொந்தமான கட்டிடங்கள் பல இடங்களில் உள்ளன.

கிரிவலப்பாதையில் உள்ள தங்கும் விடுதிகளில் தங்கி பக்தர்கள் சாமி தரிசனம் செய்துவருகின்றனர்.   கட்டிடங்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை  உறுதி தன்மையை சான்றிதழ் பெற வேண்டும் என்பது பொதுக்கட்டிடங்கள் உரிமைச் சட்டம் 1965 விதி ஆகும்.

மேலும் இதனை ஆய்வு செய்து பழனி கோட்டாட்சியரிடம் அனுமதி பெற வேண்டும். ஆனால் கோயில் நிர்வாகம் இந்த முறையை பின்பற்றாமல் கோட்டாட்சியிடம் அனுமதி பெறாமல் உள்ளது . இதனை அடுத்து பழனி கோட்டாட்சியர் சிவக்குமார்  கோயில் தேவஸ்தான நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

பொதுப்பணித்துறை சான்று, சுகாதாரத்துறை சான்று, தீயணைப்பு துறை சான்று, மின்வாரியத்தில் பெறப்பட்ட சான்று, கட்டிட அங்கீகார வரைபடம், நகராட்சி மற்றும் ஊராட்சிக்கு செலுத்தும் சொத்து வரியுடன் கோட்டாட்சியரிடம் விண்ணப்பிக்க வேண்டுமென அந்த நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளார். பழனி கோயில் நிர்வாகத்திற்கு கோட்டாட்சியர் விடுத்துள்ள நோட்டீசால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com