ஒரு வாய் பீருக்காக அடித்து கொலை செய்யப்பட்ட முதியவர்!!! பதுங்கிய குற்றவாளி கைது...

ஒரு வாய் பீருக்காக அடித்து கொலை செய்யப்பட்ட முதியவர்!!! பதுங்கிய குற்றவாளி கைது...

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதியில் ஒருவாய் பீர் குடித்தற்காக முதியவர் ஒருவரை அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஒரு வாய் பீருக்காக அடித்து கொலை  : 

கடந்த 18ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை சுமார் 3 மணி அளவில் முதியவர் ஒருவர் மர்மமான முறையில் ஒத்துரை மேரு அரசு மதுபான கடை அருகே இறந்து கிடந்தார்.இதுகுறித்து தகவல் அறிந்த உத்திரமேரூர் போலீசார் முதியோரின் சடலத்தை பற்றி பிரேத பரிசோதனைக்காகஅனுப்பியதுடன் இது சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.போலீசாரின் விசாரணையில் பல பிரிக்கிடும் தகவல்கள்  தெரிய வந்துள்ளது.


சதுக்கம் புது தெருவை சேர்ந்தவர் குணசேகரன் வயது 72, அதே தெருவை சேர்ந்த முனுசாமி என்பவரது மகன் அன்பு வயது 36.இருவரும் உத்திரமேரூரில் இருந்து மல்லியங்கரணை செல்லும் சாலையில் உள்ள அரசு மதுபான கடையில் மது வாங்கி குடித்துள்ளனர். அப்போது குணசேகரன் அன்பு குடித்துக் கொண்டிருந்த பீர் பாட்டிளை எடுத்து ஒரு வாய் குடித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அன்பு, குணசேகரனை காலால் எட்டி உதைத்து, அடித்ததாக கூறப்படுகிறது, இதில் குணசேகரன் மயங்கி விழுந்துள்ளார். அவர் போதையில் சரிந்து விழுந்ததாக நினைத்துக் கொண்ட அன்பு அங்கிருந்து கிளம்பியுள்ளார்.இந்த நிலையில் அக்கம் பக்கத்தினர் வெகு நேரம் ஆகியும் குணசேகரன் எழுந்திருக்காததால் அவரை தூக்கிப் பார்த்துள்ளனர் அப்போது அவர் உயிரிழந்து இருப்பது தெரியவந்துள்ளது.

மேலும் தெரிந்து கொள்ள /// கள்ளக்காதல் ஜோடிகளின் சடலம் அழுகிய நிலையில் மீட்பு... தற்கொலையா ??கொலையா??


இதுகுறித்து தகவல் அறிந்த உத்திரமேரூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குணசேகரனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதனைத் தெரிந்து கொண்ட அன்பு தலைமறைவாகிவிட்டார், கடந்த இரண்டு நாட்களாக அவரை பல்வேறு இடங்களில் தேடிய நிலையில், ஒரு இடத்தில் பதுங்கி இருந்த அன்புவை போலீசார் கைது செய்தனர். அன்பு விடம் நடத்திய விசாரணையில் குணசேகரனை தாக்கியதை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் அன்பு மீது கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் அன்புவை உத்திரமேரூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் தெரிந்து கொள்ள /// கட்டையால் அடித்து கொலை முயற்ச்சி...6 பேர் கைது...