மலை தேனீக்கள் கடித்து முதியவா் பலி... 13 போ் காயம்...

பூலாங்குறிச்சியில் மலை தேனீக்கள் கடித்து கல்லூரி மாணவிகள் உட்பட 13 பேர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மலை தேனீக்கள் கடித்து முதியவா் பலி... 13 போ் காயம்...

புதுக்கோட்டை | பொன்னமராவதி அருகே உள்ள  பூலாங்குறிச்சி - செவ்வூர் செல்லும் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற பொதுமக்கள், அப்பகுதியில் அரசினர் கலைகல்லூரி சென்ற மாணவ மாணவியர்கள் பள்ளிக்குச் சென்ற மாணவர்கள் அப்பகுதி சாலையை கடக்க முயன்ற போது மலைத் தேனீக்கள் கூட்டமாக வந்து விரட்டி விரட்டி கொட்டியுள்ளது.

இதில் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இரு தம்பதியினர் கீழே விழுந்துள்ளனர். கல்லூரிக்கு நடந்து சென்ற கல்லூரி மாணவிகள் மாணவர்கள் பள்ளி மாணவர்களை கொட்டியதில் அடைந்து முகம் மற்றும் உடலின் பல்வேறு இடங்களில் வீக்கத்துடன் மயக்கமடைந்துள்ளனர்.

மேலும் படிக்க | “என் மகள் ஐ.ஏ.எஸ் கனவு கேள்விக் குறியானது” - தர்ணாவில் ஈடுபட்ட தம்பதி...

அப்பகுதி மக்கள் சாலை சென்றவர் கார்களில் கொண்டு சென்று பூலாங்குறிச்சி அரசு மருத்துவமனையிலும் ,108 வாகனத்தின் மூலமாக பொன்னமராவதி அரசு மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டு அங்கு அவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக கூட்டமாக வந்து தேனீக்கள் கொட்டியதில் செவ்வூர் சோனையன் கோவில் பூசாரியாக இருந்த 60 வயது முதியவர் சிவா சம்பவ இடத்திலே பலியானார்.

இச்சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மலை தேனீக்கள் கடித்து ஒருவர் உயிரிழந்தும் 13 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இச்சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது இதுகுறித்து பூலாங்குறிச்சி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க | இந்திய கடல் எல்லையில் தொடரும் தமிழ்நாட்டு மீனவர்கள் கைது!