பங்குனி திருவிழாவையொட்டி, எட்டுத்திக்கிலும் கொடியேற்றம்...

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயிலில் பங்குனி திருவிழாவையொட்டி எட்டுத்திக்கிலும் கொடியேற்றப்பட்டது.

பங்குனி திருவிழாவையொட்டி, எட்டுத்திக்கிலும் கொடியேற்றம்...

பஞ்சபூத ஸ்தலங்களில் நீர்ஸ்தலமாக விளங்கும் திருச்சி திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேஸ்வரர் கோயில் திகழ்கிறது. பாரம்பரியமும், பழம்பெருமையும்மிக்க இக்கோயிலில் ஆண்டுதோறும் மண்டல பிரமோற்சவம் 48-நாட்கள் வெகுசிறப்பாகக் கொண்டாடப்படும். 

இதன்படி, இந்தாண்டுக்கான மண்டல பிரமோற்சவம்எனப்படும் பங்குனி திருவிழா கடந்த மார்ச் 1ம்தேதி அரசடி மண் எடுத்தல் விழாவும், பெரிய கொடியேற்ற விழாவுடன் துவங்கியது.

மேலும் படிக்க | பழனி முருகனுக்கு பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பெண்கள்...

மண்டல பிரமோற்சவத்தின் முக்கிய விழாவான பங்குனி திருவிழாவையொட்டி எட்டுத்திக்கிலும் கொடியேற்றும் வைபவம் இன்று காலை நடைபெற்றது. சோமாஸ்கந்தர் மற்றும் அம்பாள் புறப்பாடு நடைபெற்று 3ம்பிரகாரத்தில் வீதிஉலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தொடர்ந்து மூன்றாம் பிரகாரத்தில் எட்டு திக்குகளிலும் உள்ள கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது, இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

மேலும் படிக்க | விவசாய நிலத்தில் டாஸ்மாக் மதுபானக்கடை அமைக்க தடை - நீதிமன்றம்

தொடர்ந்து தினசரி பல்வேறு வாகனத்தில் சுவாமி வீதிஉலா வைபவம் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்ட வைபவம் மார்ச் 23ம்தேதி காலை 8 மணிக்கு வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை அதிகாரிகள், கோயில் அறங்காவலர்கள் செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க | சென்னை தியாகராய நகர்... திருப்பதி தேவஸ்தான குடமுழுக்கு... அனுமதி இல்லை!!