ஒரு கிலோ கேக்... ஒரு ரூபாய்....!!!

ஒரு கிலோ கேக்... ஒரு ரூபாய்....!!!

ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ கேக் என்ற பொய்யான விளம்பரத்தால் நீண்ட வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்தவர்களுக்கு கிடைக்காததால் அதிருப்தி அடைந்துள்ளனர்.

திருவண்ணாமலை நகரின் காந்திநகர் பைபாஸ் சாலையில் புதிதாக திறக்கப்பட்ட கேக் ஹெவன் என்ற புதிய கேக் கடை இன்று புதிதாக திறக்கப்பட்டது.  இந்த கேக் கடையில் இன்று காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை வரும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ கேக் விற்பனை செய்யப்படும் என்று செய்யப்பட்ட விளம்பரத்தை பார்த்து 100 க்கும் மேற்பட்ட சிறியவர்கள் பெரியவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ கேக் வாங்குவதற்கு காலை 9 மணி முதல் நீண்ட நேரமாக நீண்ட வரிசையில் காத்திருந்தனர், இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஒரு ரூபாய் கொடுத்து ஒரு கிலோ கேக் பெற்று வந்த சிறுவர்கள் உள்ளிட்ட சுமார் 20 நபர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் கேக்கினை எடுத்துச் சென்றனர், ஏராளமான வாடிக்கையாளர்கள் கடையின் முன் குவிந்ததால் முதலில் வந்த 20 நபர்களுக்கு மட்டுமே ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ கேக் வழங்கப்பட்டது, அதன் பின்னர் நீண்ட வரிசையில் காத்திருந்த ஏராளமான வாடிக்கையாளர்கள் ஒரு கிலோ கேக் தீர்ந்துவிட்டது என்பதால் சிறிய கேக் வழங்கிய காரணத்தால் 100 கிராம் கேக் மட்டும் பெற்றவர்கள் மிகுந்த அதிருப்தியில் ஏமாற்றத்துடன் சென்றனர்.

ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ கேக் கிடைக்கும் என்ற ஆவலில் காத்திருந்த வாடிக்கையாளர்களுக்கு சிறிய 100 கிராம் கேக் மட்டும் வழங்கி புதிதாக திறந்த கேக் கடை உரிமையாளர் ஏமாற்றி விட்டதாக மிகுந்த ஏமாற்றத்துடன் கொளுத்தும் வெயிலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் முண்டியடித்து காத்திருந்த நிலையில் ஏராளமான வாடிக்கையாளர்கள் ஒரு கிலோ கேக் கிடைக்காத காரணத்தால் அதிருப்தியில் சென்றனர்.

வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு விளம்பரங்கள் வெளிவரும் நிலையில் இவ்வாறு பொய்யான விளம்பரத்தை செய்துவிட்டு 11 மணி முதல் 1 மணி வரை வரும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் ஒரு கிலோ கேக் ஒரு ரூபாய்க்கு கேக் வழங்கப்படும் என்று அறிவித்துவிட்டு கடைசியில் கேக் காலி ஆகிவிட்டது என்று 20 நபர்களுக்கு மட்டுமே ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அளித்துவிட்டு ஏமாற்றியது பொதுமக்களிடையே மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியது, காலை 9 மணி முதல் நீண்ட நேரமாக காத்திருந்தது வீணாகி விட்டது என்று மன வருத்தத்துடன் ஏமாற்றத்துடன் சென்றனர்.

கேக் கடையில் ஒருவர் ஒரு கிலோ கேக் வழங்குவதாக விளம்பரம் செய்து சில நபர்கள் மட்டுமே வழங்கப்பட்டு  பொது மக்களை பொய்யான விளம்பரம் கொடுத்து ஏமாற்றியது என்று பொதுமக்கள் முணுமுணுத்துச் சென்றனர்.

இதையும் படிக்க:   அதிமுகவில் இணைந்த அமமுக மாவட்ட பொருளாளர்...!!