யானை சவாரியை மீண்டும் தொடர சுற்றுலா பயணிகள் கோரிக்கை...

தெப்பக்காடு யானைகள் முகாமில் ரத்து செய்யப்பட்டுள்ள யானை சவாரி இயக்க வேண்டும் என வனத்துறையினருக்கு சுற்றுலா பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
யானை சவாரியை மீண்டும் தொடர சுற்றுலா பயணிகள் கோரிக்கை...

நீலகிரி | ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசனை முன்னிட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள சுற்றுலாத் தலங்களை கண்டு ரசிக்க தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிவது வழக்கம்.

அப்படி வரும் சுற்றுலா பயணிகள் முதுமலை புலிகள் காப்பகத்தில் வசிப்பிடமாக கொண்டுள்ள யானை, புலி, மான், சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் மற்றும் அரிய வகை பறவைகளை கண்டு ரசிக்க அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அவர்களுக்காக வாகனங்கள் மற்றும் யானைகள் மூலம் சவாரிகள் நடத்தப்பட்டு வனப்பகுதிக்குள் அழைத்து செல்வது வழக்கம். 

ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக யானை சவாரி தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு யானை சவாரி செய்ய வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.

இதனால் நீலகிரி மாவட்டத்தில் இன்னும் ஓரிரு வாரங்களில் கோடை சீசன் துவங்க உள்ளதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் முதுமலை தெப்பக்காடு பகுதிக்கு வருகை புரியும் நிலையில் தெப்பக்காட்டில் யானை சவாரி இயக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் வாடகை வாகன ஓட்டுநர்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com