உதகையில் வார இறுதிக்காக குவிந்துள்ள சுற்றுலா பயணிகள்...

வார விடுமுறையான இன்று நீலகிரி மாவட்டம் உதகையில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்து வருகின்றனர்.
உதகையில் வார இறுதிக்காக குவிந்துள்ள சுற்றுலா பயணிகள்...

நீலகிரி | உதகை சூட்டிங்மட்டம் சுற்றுலா தலம்,  அரசு தாவரவியல் பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்தனர். கண்ணாடி மாளிகையில் காட்சிக்கு வைக்கப்பட்ட பூந்தொட்டிகளில் பூத்து குலுங்கிய பல வண்ண மலர்களை கண்டு ரசித்தனர்.

இதுதவிர உதகை படகு இல்லம், ரோஜா பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது. வார விடுமுறையான இன்று வெளி மாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து உதகை மலை ரயிலில் சுற்றுலா பயணிகள் பயணம் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு வந்த மலை ரெயிலில் 230 இருக்கைகளும் நிரம்பி வழிந்தது. மலை ரெயிலில் பயணிக்கும் போது குகைகள், பசுமையான தேயிலை தோட்டங்கள், மலைகளை மோதிச் செல்லும் மேகக் கூட்டங்களை கண்டு ரசித்தனர். 

உதகை ரயில் நிலையத்தில் நூற்றாண்டு பழமை வாய்ந்த நீராவி என்ஜினை பார்வையிட்டு புகைப்படம் எடுத்துச் சென்றனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com