
திண்டுக்கல் | ஒட்டன்சத்திரம் நகராட்சிக்குட்பட்ட 18-வது வார்டு AMK நகரில் தமிழர்களின் திருவிழாவான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பாஜக சார்பில் நகர தலைவர் சிவா தலைமையில் பெண்கள் பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகளுடன் நம்ம ஊரு பொங்கல் விழா தொடங்கப்பட்டது.
சிறுவர்களுக்கான ஓட்டப்பந்தையம், நீர் நிரப்புதல், சாக்குப் போட்டி, மியூசிக்சேர், உறியடித்தல், கயிறு இழுத்தல் கோலப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
மேலும் இந்த பொங்கல் விழாவில் மாநில செயற்குழு உறுப்பினர் பழனிச்சாமி, மாவட்ட அரசு தொடர்பு பிரிவு தலைவர் மகுடீஸ்வரன், நகர பொதுச்செயலாளர் குமார்தாஸ் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.