உலகிலேயே மிகப்பெரிய கால பைரவர் சிலை...! ஆர்வத்துடன் காத்திருக்கும் மக்கள்...!

உலகிலேயே மிகப்பெரிய கால பைரவர் சிலை...! ஆர்வத்துடன் காத்திருக்கும் மக்கள்...!

Published on

ஈரோடு மாவட்டம் பூந்துறை அருகேயுள்ள ராட்டைசுற்றிபாளையத்தில் பைரவருக்கு என தனியாக கோவில் அமைக்கும் பணிகள் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இந்த கோயிலின் மகா கும்பாபிஷேக விழா வருகிற மார்ச் மாதம் 13 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்த கோவிலில் 39 அடி உயரத்திற்கு உலகிலேயே மிகப்பெரிய பிரம்மாண்டமான கால பைரவர் சிலை, 650 கிலோ பஞ்சலோகத்தினால் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் உலகிலேயே எங்கும் இல்லாதவாறு 64 பைரவர்களும் உள்ள கோவிலாக இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்த சிலை யுனிக் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் எனும் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள இக்கோவிலின் கும்பாபிஷேக விழாவை சிறப்பாக கொண்டாட அப்பகுதி மக்கள் மிக ஆர்வமாக தயாராகி வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com