சுடுகாட்டை அபகரிக்கும் முயற்சியில் கைவிடுமாறு மக்கள் ஆர்ப்பாட்டம்...

இடுகாட்டை அபகரிக்கும் முயற்சியை கைவிடுமாறு மக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சுடுகாட்டை அபகரிக்கும் முயற்சியில் கைவிடுமாறு மக்கள் ஆர்ப்பாட்டம்...
Published on
Updated on
1 min read

கன்னியாகுமரி | தோவாளை தாலுகா திடல் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட ரத்தனபுரத்தில் சுமார் 350 தலித் குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் ரத்தனபுரம் ஊரின் வடக்கு பகுதியில் திடல் வருவாய் கிராமத்துக்கு உட்பட்ட புல எண் 279/1 ஆதிதிராவிட மக்கள் சுமார் 300 ஆண்டுகள் பயன்படுத்தி வந்த இடுகாடு இடம் 15 சென்ட் அரசு புறம்போக்கு ஆகும்.

அரசு புறம்போக்கு இடுகாட்டு இடத்தில் ரத்தினபுரம் தலித் மக்கள் கடந்த 300 வருடங்களாக சுமார் 500-க்கும் மேற்பட்டோர் இறந்தவர்களை அடக்கம் செய்துள்ளனர்.

தற்போது தோவாளை வட்ட அதிகாரிகளும் குமரிமாவட்ட அரசு அதிகாரிகளும் இரத்தினபுரம் பகுதியில் உள்ள இடுகாட்டில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதாகவும், இலவச வீட்டு மனை பட்டா கொடுப்பதாகவும், BSNL டவர் கொண்டு வர போவதாகவும் ரத்தினபுரம் மக்களிடம் தொடர்ச்சியாக கூறி பதட்டத்தையும் அச்சுறுத்தலையும் ஏற்படுத்தி வருகின்றனர்.

மேற்படி இடுகாட்டில் இரத்தினபுரம் பகுதி மக்கள் வருடம் தோறும் கல்லறை திருநாள் அனுசரித்து முன்னோர்களை நினைத்து நினைவு கூர்ந்து வருகிறார்கள்.

எனவே தலித் மக்களின் இடுகாட்டை தலித் மக்களிடம் இருந்து அபகரிக்கும் நோக்கில் இடுகாடு இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவோம். இலவச பட்டா கொடுப்போம் என்று குறி தொடர்ச்சியாக தலித் மக்களை அச்சுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.

மேலும், தோவாளை வட்ட அதிகாரிகள் மற்றும் தமிழக அரசு கண்டித்து இதனை கைவிட கோரியும் இன்று தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com