
தருமபுரி | கார்த்திகை மாதம் தொடக்கத்தில் இருந்து மாசி மாதம் வரை பனிப்பொழிவு அதிகமாக காணப்படும். காலநிலை மாறுபாட்டால் தருமபுரி மாவட்டத்தில் கடுமையான பனிபொழிவு ஏற்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு மழை பொழிந்தது. இதைத் தொடர்ந்து மழை நின்றதால், பனிப்பொழிய தொடங்கியுள்ளது.
இந்நிலையில் இன்று தருமபுரி மாவட்டத்தில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சாலை, கலெக்டர் ஆபீஸ், ஒட்டப்பட்டி, பஸ் நிலையம், அன்னசாகரம் பாப்பிரெட்டிபட்டி, அரூர் நகரம், மொரப்பூர், பாலக்கோடு, உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது.
காலை 8 மணி வரை நீடித்த இந்த பனி மூட்டத்தால் சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் வாகனங்கள் முகப்பு விளக்கு எரிந்தவாறு சென்றன.
இந்த கடும் பனி மூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளானதோடு பொதுமக்களின் இயல்பு வாழக்கையும் பாதிக்கப்பட்டது.