"பெரியார் தாத்தா" குழந்தைகள் கையில் தவழும் பெரியார்...!

குழந்தைகளை தூங்க வைக்க சொல்லப்படும் கதைகளுக்கு மத்தியில் குழந்தைகளை விழித்துக் கொள்ளச் செய்யும் வகையில் "பெரியார் தாத்தா" என்ற புத்தகத்தை எழுதியுள்ளார் அருண் மோ.

"பெரியார் தாத்தா"  குழந்தைகள் கையில் தவழும் பெரியார்...!

பெரியார் தாத்தா : பொதுவாகவே குழந்தைகளை தூங்க வைப்பதற்கு தினந்தோறும் ஒரு கதைகளை செல்ல வேண்டிய கட்டாயம் பெற்றோர்களுக்கு உண்டு. அதிலும் புதிது புதிதாய், வித்தியாசமாய், ஆச்சரியங்கள் கலந்த கதைகளாக இருக்க வேண்டும். என்பது எழுதப்படாத சட்டம்.

இதற்காக குழந்தைகளுக்கு பஞ்சதந்திர கதைகள் அதிக அளவில் சொல்லப்பட்டு வருகிறது. இந்த வயதில் குழந்தைகள் எதைக் கேட்டாலும் அதனை மனதில் பதிய வைத்துக் கொள்கின்றனர். குழந்தைகளுக்கு நாம் என்ன கற்றுத்தருகிறோம் என்பதில்தான் அந்த குழந்தைகளின் மனவளர்ச்சி இருக்கும். 

மேலும் படிக்க | “முத்துவும் முப்பது திருடர்களும்”- காவல்துறையின் புதிய விழிப்புணர்வு முயற்சி...

இதனை உணர்ந்த ஒரு தந்தை தனது குழந்தைக்கு, அரசியல் அறிவையும், பெரியாரின் கருத்துக்களையும் கதையாக கூறியுள்ளார். இது போன்ற நல்ல கருத்துக்கள் அனைத்து குழந்தைகளையும் சென்று சேர வேண்டும் எண்ணத்தில் உருவானது தான் இந்த "பெரியார் தாத்தா"  புத்தகம். 

இந்த புத்தகத்தில் அப்படி என்ன இருக்கிறது? குழந்தைகளுக்கு பெரியாரை குறித்த சொல்ல வேண்டிய அவசியம் என்ன? இந்த புத்தகத்தின் ஆசிரியர் அருண் மோ விளக்குகிறார். பெரியாரின் பகுத்தறிவு, கருத்துக்கள், அறிவியல் சித்தாந்தங்கள் இவை எல்லாம் பெரியவர்கள் புரிந்து கொள்வது கடினம் என்ற நிலையில், சிறுவர்களுக்கு, அதுவும் அவர்கள் விரும்பும் வகையில் கொடுப்பது எப்படி சாத்தியமானது. 

மேலும் படிக்க | "திருவாரூர் முத்துவேல் கருணாநிதி எனும் நான்" புத்தகம் வெளியீடு!

பெரியாரின் கருத்துக்களை குழந்தைகளுக்கு புரியும் வகையில் எளிமைப் படுத்தினால் மட்டும் போதாது. கண்ணைக் கவரும் வண்ணப் படங்கள் இடம் பெற வேண்டும்.

நாம் பார்த்த பெரியார்  வேட்டியும், சட்டையும், கண்ணாடியும் அணிந்தருந்த நிலையில், குழந்தைகளின் கற்பனை உலகத்தில் பெரியார் ஜீன்ஸ் பேண்ட் அணிந்து, ஜெட் விமானத்தை இயக்குவது போன்றும் அந்த ஜெட் விமானத்தை தொழில் நுட்பம் மூலம் சுருக்கி கைத்தடியாக வைத்திருப்பது போன்ற படங்கள், அறிவியல் ஃபேண்டஸியாக இடம் பெற்றுள்ளது.

இதெல்லாம் சரி, ஆனால் எதற்காக இந்த வயதில் குழந்தைகளுக்கு பெரியாரை கற்பிக்க வேண்டும் என்ற கேள்வி எல்லோரையும் போல் நமக்கும் எழுந்தது. 

மேலும் படிக்க | ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தலைப்புகள் அடங்கிய புத்தக கண்காட்சி திருவிழா...! தொடங்கி வைத்த துணை சபாநாயகர்..!

இது குறித்து அவரிடம் கேட்டபோது, மதவாதம், பிற்போக்குத்தனம், தீவிரவாதம், மூட நம்பிக்கை இவைகள் குழந்தைகளை சூழ்ந்துள்ள நிலையில், இதிலிருந்து அடுத்த தலைமுறையினரை காப்பாற்ற, இது குறித்த தெளிவு, விழிப்புணர்வு குழந்தைகளுக்கு வேண்டும். அதற்காகவே இந்த பெரியார் தாத்தா வடிவமைக்கப்பட்டதாக கூறுகிறார் நூலின் ஆசிரியர். 

மொத்தத்தில் இந்த புத்தகம் குழந்தைகளை தூங்க வைப்பதற்கு அல்ல...
பிற்போக்குத்தனம், மதவாதம், மூடநம்பிக்கையில் இருந்து குழந்தைகளை விழித்துக் கொள்ள செய்யும் புத்தகம் என்றால் அது மிகையில்லை...

மாலை முரசு செய்திகளுக்காக ஒளிப்பதிவாளர் பாலாவுடன் செய்தியாளர் தாமஸ் லிகோரி

மேலும் படிக்க | " ஆட்டோ நூலகம் " ? இது என்ன புதுசா இருக்கு...!