4- பக்க கடிதத்துடன் தற்கொலை செய்துகொண்ட மருந்தாளுனர்...!

4- பக்க கடிதத்துடன் தற்கொலை செய்துகொண்ட மருந்தாளுனர்...!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலை அடுத்த காரியாவிளை பகுதியை சேர்ந்தவர் சஜிலா. இவரது கணவர் ஆனந்த குமார். இந்த தம்பதியருக்கு 7-வயதில் ஆண் குழந்தையும், 3-வயதில் பெண் குழந்தையும் உள்ளனர். மேலும் சஜிலா நாகர்கோவில் அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மருந்தாளுனராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று மாலை பணி முடிந்து வீட்டிற்கு வந்த அவர், குழந்தைகளுக்கு உணவளித்து விட்டு சமயலறை ஸ்டோர் ரூமிற்கு சென்று கதவை பூட்டியுள்ளார்.

பின்னர் இரவு வீட்டிற்கு வந்த கணவர் ஆனந்தகுமார் அழைத்தும், வெளியே வராத நிலையில் கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது சஜிலா அந்த அறையில் தூக்கில் தொங்கியவாறு சடலமாக காணப்பட்டார். இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குளச்சல் போலீசார் அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு அவர் எழுதி வைத்திருந்த 4-பக்க கடிதத்தையும் கைப்பற்றி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.