அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்த புகைப்பட கண்காட்சி...!

அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்த புகைப்பட கண்காட்சி...!

அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள்  மற்றும் மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள் குறித்தும் புகைப்பட கண்காட்சி மேட்டுப்பாளையத்தில் நடைபெற உள்ளது.

கோவை மேட்டுப்பாளையம், அன்னூர் சாலை லட்சுமி திருமண மண்டபத்தில் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள், மக்கள் நலத்திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி நாளை முதல் தொடங்க உள்ளது .இந்த கண்காட்சியை மத்திய மீன்வளத்துறை மற்றும் விலங்குகள் நலத்துறை மற்றும் தகவல் ஒளிபரப்புத் துறையின் இணை அமைச்சர் எல் முருகன் நாளை துவக்கி வைக்க உள்ளார்.

நாளை முதல் 5 நாட்கள் வரை நடைபெறும் இந்த கண்காட்சியில் இந்திய அரசு தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கூடுதல் தலைமை இயக்குனர் அண்ணாதுரை வாழ்த்துரை வழங்கினார். இந்த கண்காட்சியில் அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்களின் வரலாறு கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. அரித்துவாரமங்கலத்தில் கடந்த 1923-ம் ஆண்டு பிறந்து சுதந்திரப் போராட்டத்தில் பங்குபெற்ற ஏ.வி. ராமசாமி, கிருஷ்ணமூர்த்தி, வாணியம்மாள், சொர்ணம்மாள், கணபதி, வாட்டாகுடி இரணியன் உள்ளிட்ட பல்வேறு சுதந்திர போராட்ட வீரர்களின் தியாக வரலாறு குறித்து அவர்களின் புகைப்படங்களுடன் காட்சிப்படுத்தப்பட்டது.

இதேபோல் பிரதம மந்திரி முத்ரா திட்டம், கிசான் கிரெடிட் கார்டு திட்டம், வீட்டு வசதி திட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்தும் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த வரலாற்றை, பார்த்து தெரிந்து கொள்வதற்காக கல்லூரி மாணவ- மாணவிகள் வரவழைக்கப்பட உள்ளனர் என்றும். அவர்கள் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வரலாற்றை பார்த்து தெரிந்து கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளதாகவும் கூடுதல் தலைமை இயக்குநர் அண்ணாதுரை கூறினார். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com