சொந்த காரில் வந்த அக்யூஸ்ட்... போலீசுக்கு தண்டனை...

நிதிமன்றத்திற்கு தனது சொந்த காரில் வருகை தந்த குற்றவாளியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையொட்டி அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சொந்த காரில் வந்த அக்யூஸ்ட்... போலீசுக்கு தண்டனை...
Published on
Updated on
1 min read

கிருஷ்ணகிரி | ஓசூர் ராம்நகர் பகுதியில் கடந்த 8-ந் தேதி இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக ராம்நகர் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவர் கடந்த 11-ந் தேதி ஓசூர் டவுன் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் டவுன் போலீசில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரியும் செல்வம் மற்றும் ஏட்டு சரவணன் ஆகியோர் கார்த்திக்கை போலீஸ் நிலையத்தில் இருந்து கோர்ட்டுக்கு போலீஸ் ஜீப்பையோ அல்லது வாடகை வாகனத்திலேயோ அழைத்து செல்லவில்லை என தெரிகிறது.

மேலும் கார்த்திக்கின் சொந்த காரிலேயே அழைத்து சென்றனராம். பின்னர் ஒசூர் கிளை சிறைக்கும் அதே காரில் அழைத்து சென்றுள்ளனர். இதுதொடர்பான வீடியே சமூக வலைத்தளங்களில் பரவியது.

இந்த விவகாரம் சர்ச்சையானதை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ் குமார் தாக்கூர் விசாரணை நடத்தினார். இதையடுத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் ஏட்டு சரவணன் ஆகியோரை பணி இடைநீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு  உத்தரவிட்டார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com