அவன் இவன் படபாணியில் குற்றங்கள் நிகழாமல் இருக்க கருப்பு சாமிக்கு கெடா வெட்டி போலீசார் வழிபாடு

அவன் இவன் திரைப்பட பாணியில் புதிய ஆண்டில் கொலை,கொள்ளை, குற்ற சம்பவங்கள், அடிதடி போன்ற எதுவும் நடக்காமல் இருக்க வேண்டும் என்று வண்டிகருப்பணசாமி கோவிலில் கிடா வெட்டி பொங்கல் வைத்து வழிபாடு நடத்திய வடமதுரை போலீசார்
அவன் இவன் படபாணியில் குற்றங்கள் நிகழாமல் இருக்க  கருப்பு சாமிக்கு கெடா வெட்டி  போலீசார் வழிபாடு

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா அய்யலூரில் காவல் தெய்வமான வண்டி கருப்பணசாமி கோவில் உள்ளது இங்கு புதிதாக வாகனம் வாங்குவோர் தங்கள் வாகனங்களை கொண்டுவந்து வழிபாடு செய்துவிட்டு பயன்படுத்த தொடங்குவர் அதேப்போல வெளியூர் பயணிப்பவர்கள் வாகன ஓட்டிகள் இங்கு வந்து வழிபாடு செய்துவிட்டு தங்கள் பயணத்தை தொடங்குவர்.

நேற்றைய தினம் 2023 புத்தாண்டு தினத்தை நாடு முழுவதும் ஒரு விமர்சையாக கொண்டாடப்பட்டது புது வருடத்தில் எந்தவித அசம்பாவிதமும் நடக்காமல் இருக்கவும் கொலை, கொள்ளை போன்ற குற்ற சம்பவங்கள்  நடக்காமல் இருக்க  வடமதுரை காவல்துறையினரின் சார்பாக வேடசந்தூர் துணை கண்காணிப்பாளர் துர்கா தேவி தலைமையில்
அய்யலூர் வண்டிகருப்பணசாமி கோவிலில் பொங்கல் வைத்து கிடா வெட்டி நேரத்திக்கடன் செலுத்தி வழிபாடு நடத்தினர் அதன்பின்னர் காவல்துறையினரின் உறவினர்களுக்கு கறி விருந்து வழங்கப்பட்டது.

இந்த வழிபாட்டில் வேடசந்தூர் துணை கண்காணிப்பாளர் துர்காதேவி மற்றும் வடமதுரை இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகன், வடமதுரை காவல் நிலையத்தில் பணிபுரியும்  காவலர்கள், குற்றப்பிரிவு, தனிப்படை போலீசார் மற்றும் வேடசந்தூர் சப் டிவிஷனில் உள்ள அனைத்து காவல் நிலைய காவலர்கள்  அவர்களின் குடும்பத்தினர் என பலர் கலந்து கொண்டனர்

அவன் இவன் படத்தில் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க கிடாவெட்டி குற்றவாளிகளுக்கு விருந்து வைப்பது போல் காட்சி இடம்பெற்று இருக்கும் ஆனால் வடமதுரை காவல்துறையினர் கிடா வெட்டி உறவினர்களுக்கு விருந்து வைத்து வழிபட்டது 
வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com