விஷச்சாராய உயிரிழப்பு: புதுச்சேரி கலால்துறை துணை ஆணையர் பணியிட மாற்றம்!

விஷச்சாராய உயிரிழப்பு: புதுச்சேரி கலால்துறை துணை ஆணையர் பணியிட மாற்றம்!
Published on
Updated on
1 min read

விஷச்சாராய உயிரிழப்பு எதிரொலியாக புதுச்சேரி கலால்துறை துணை ஆணையர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மரக்காணம் மற்றும் செங்கல்பட்டு விஷச்சாராய உயிரிழப்புகளுக்கு புதுச்சேரியிலிருந்து விஷச்சாராயம் கடத்தப்பட்டதே காரணம் என அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளின்  தொடர் குற்றச்சாட்டு எதிரொலியாக புதுச்சேரி கலால்துறை துணை ஆணையர் சுதாகர், அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

தமிழகத்தில் விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்த 22 பேர் உயிரிழந்தனர். இந்த கள்ளச்சாராயம் புதுச்சேரி பகுதியில் இருந்துதான் தமிழகத்துக்கு கடத்தப்பட்டதாக தகவல் வெளியானது. புதுச்சேரி கலால்துறையின் மெத்தனப் போக்கால்தான் புதுச்சேரி கள்ளச்சாராய சந்தையாக உருவெடுத்து உள்ளதாகவும், மேலும் கள்ளச்சாராயம் கடத்தலை தடுக்க தவறிய கலால்துறை ஆணையர் பொறுப்பு வகிக்கும் ஆட்சியர், கலால்துறை துணை ஆணையர் ஆகியோருக்கு எதிராக அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் தொடர் குற்றச்சாட்டு ஏதிரொலியாக புதுச்சேரி கலால்துறை துணை ஆணையர் சுதாகரை பணியிட மாற்றம் செய்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் அவருக்கு பதிலாக சமூக நலத்துறை இயக்குனர் குமரனுக்கு கலால்துறை துணை ஆணையர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com