புதுச்சேரி:சிறையில் தை பொங்கலை கொண்டாடிய  கைதிகள் !!

புதுச்சேரி:சிறையில் தை பொங்கலை கொண்டாடிய  கைதிகள் !!

புதுச்சேரி மத்திய சிறையில் தை பொங்கலை முன்னிட்டு கைதிகளால் விவசாயம் செய்யப்பட்டு விளைந்த மஞ்சள் கிழங்குகள் அறுவடை செய்யப்பட்டது.

புதுச்சேரி: காலாபட்டில் உள்ள  மத்திய சிறையில் 250 க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் உள்ளனர், இதில்  நீண்ட நாட்களாக சிறையில் உள்ள 60 க்கும் மேற்பட்ட தண்டனை கைதிகள் தனியார் தொண்டு நிறுவனம் உதவியுடன் சிறையில் உள்ள 5 ஏக்கர் நிலத்தில் மா, பலா, வாழை, எலுமிச்சை, செவ்வாழை, காய்கறிகள் என பல உணவு பொருட்களை விவசாயம் செய்து அறுவடை செய்து வருகின்றனர்,  இந்நிலையில் சிறைக்கைதிகள் சார்பில் மஞ்சள் கிழங்கு விதைக்கப்பட்டு அவற்றை பொங்கலை முன்னிட்டு அறுவடை செய்யப்பட்டது.

 இதனை தனியார் தொண்டு நிறுவனம் உதவியுடன் பொது விற்பனைக்கு  வெளிச்சந்தையை விட 10 ரூபாய் குறைவாக விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, இந்நிகழ்ச்சிக்கு சிறை துறை ஐஜி ரவிதீப் சிங் சாகர்  தலைமை தாங்கி அறுவடை செய்யப்பட்ட மஞ்சளை பெற்று கொண்டார், மேலும் இந்நிகழ்வில் தலைமை கண்காணிப்பாளர் அசோகன், மத்திய சிறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் மற்றும் தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர், தொடர்ந்து சிறை வளாகத்தில் பொங்கலை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பரதநாட்டிய நடன நிகழ்ச்சி நடைபெற்றது, இதனை சிறை கைதிகள் கண்டு ரசித்தனர்.