விவசாய தோட்டத்தில் புகுந்த “15” அடி நீள மலைப்பாம்பு...

ராசிபுரம் அருகே விவசாய தோட்டத்தில் புகுந்த 15 அடி நீளம் மலைபாம்பு லாபமாக ராசிபுரம் வனத்துறையினர் பிடித்தனர்.

விவசாய தோட்டத்தில் புகுந்த “15” அடி நீள மலைப்பாம்பு...

நாமக்கல் : ராசிபுரம் அருகே உள்ள மொஞ்சனூர் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலையில் வழக்கம் போல் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த லோகநாதன் திடீரென்று சுமார் 15 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு ஊர்ந்து சென்றதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

மேலும் படிக்க | அம்மன் தலையில் சுற்றிய பாம்பு...! ஆச்சர்யத்துடன் வழிபட்ட மக்கள்...!

பின்னர் ராசிபுரம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே 2 மணி நேரத்திற்கு மேலாக போராடி மலைப்பாம்பை உயிருடன் பிடித்தனர்.பின்னர் பிடிபட்ட 15 அடி மலைபாம்பு அருகில் உள்ள அடர்ந்த வனப்பகுதியான காப்பு காட்டில் வனத்துறையினர் உயிருடன் விட்டனர்.

மேலும் படிக்க | குடியிருப்புகளில் இருந்த 9 அடி மலைப்பாம்பு...!