‘சூசைட் பாயிண்ட்’ வரை செல்ல அனுமதிக்க கோரிக்கை...

பகுதிக்கு உரிய பாதுகாப்புடன் சுற்றுலா பயணிகளை தொட்டபெட்டா சூசைட் பாயிண்ட் வரை செல்ல அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

‘சூசைட் பாயிண்ட்’ வரை செல்ல அனுமதிக்க கோரிக்கை...

நீலகிரி மாவட்டத்தில் உள்ள தொட்டபெட்டா சிகரம் மிக உயரமான மலை ஆகும். இதன் உயரம் 2623 மீட்டர்கள் ஆகும். முக்கிய சுற்றுலா தளமாக விளங்கி வரும் தொட்டபெட்டா சிகரத்தில் இருந்து சாமுண்டி மலை பார்க்க முடியும். மேலும் உதகை நகரம், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து மலைகளையும் காண முடியும்.

இந்த சிகரத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் அழகிய இயற்கை காட்சிகளையும், தொலைநோக்கி மூலம் பல்வேறு பகுதிகளை கண்டு ரசித்து செல்கின்றனர். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி கோவையை சேர்ந்த ஒரு பெண்மணி தடுப்பு வேலிகளைத் தாண்டி குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

மேலும் படிக்க | பொருளாதார தேக்க நிலை...இலங்கைக்கு உதவிக் கரம் நீட்டுமா இந்தியா?!!

இதனை அடுத்து தொட்டபெட்டா சிகரத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளை சூசைட் பாயிண்ட் பகுதிக்கு அனுமதிக்காமல் வலியை அடைத்துள்ளனர். இதனால் தொடப்பட்ட சிகரத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் தொலைநோக்கி மூலம் மட்டுமேஇயற்கை காட்சிகளை கண்டு ரசித்து செல்கின்றனர்.

இந்நிலையில் உரிய பாதுகாப்புகளுடன் சூசைட் பாயிண்ட் பகுதிக்கு சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | குற்றால அருவியிலே.. குளிச்சது போல ஏதுமில்லை... தடை விலகி குளிக்க அனுமதி...