நேர்மையின் மறு உருவத்திற்கு மரியாதை.. கொடைக்காணலில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்...

பிரையண்ட் பூங்காவில் தவறவிட்ட பணம் மற்றும் நகைகளை மீட்டுக் கொடுத்த பின் பணியாளருக்கு தோட்டக்கலை துணை இயக்குனர் பாராட்டுகளைத் தெரிவித்தார்.

நேர்மையின் மறு உருவத்திற்கு மரியாதை.. கொடைக்காணலில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்...

திண்டுக்கல் | கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் டெல்லியை சேர்ந்த சில சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர் . அவர்களுடன் வந்த பெண் ஒருவர் தனது கைப்பையில் தங்க நகைகள் மற்றும் ரொக்க பணம் அலைபேசி உள்ளிட்டவற்றை பூங்காவில் தவற விட்டு சென்றனர் .

தொடர்ந்து தோட்டக்கலைத்துறை தற்காலிக பணியாளர் கலைச்செல்வி அதனை எடுத்து பூங்கா அலுவலகத்தில் ஒப்படைத்தார் . தொடர்ந்து சிசிடிவி காட்சிகளுடன் அடிப்படையில் தவறவிட்ட கைப்பை உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது .

தற்காலிக பணியாளர் கலைச்செல்வி நேர்மையை பாராட்டி தோட்டக்கலைத் துறை துணை இயக்குனர் பெருமாள் சாமி பாராட்டு தெரிவித்து வெகுமதி வழங்கினார்.

மேலும் படிக்க | சாலையோர சிறு வியாபாரிகளுக்கு தள்ளுவண்டி...