காவல் துறையைக் கண்டித்து சாலை மறியல்...

சாலை மறியல் காரணமாக தேனி போடி தேசிய நெடுஞ்சாலை மற்றும் புதிதாக திறக்கப்பட்ட திண்டுக்கல் குமுளி பைபாஸ் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

காவல் துறையைக் கண்டித்து சாலை மறியல்...

தேனி அருகே உள்ள மாரியம்மன் கோவில்பட்டியை சேர்ந்தவர் வைரவன் இவர் கடந்த 28ஆம் தேதி மாலை மனைவி அமுதா மற்றும் இரண்டாவது மகன் யாதேஷ் உடன் பழனிசெட்டிபட்டி செல்வதற்காக திண்டுக்கல் குமுளி பைபாஸ் சாலையை கடக்க முயற்சித்துள்ளார்.

அப்பொழுது  பைபாஸ் சாலையை  திரும்பிய வெள்ளை நிற போலிரோ வாகனம் இருசக்கர வாகனத்தில் மோதியதாவும்  இதில் வைரவன் அவரது மனைவி மகன் மூவரும் காயமடைந்த நிலையில் மோதிய வாகனம் நிற்காமல் சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க | குழியை மூட குழியிலேயே இறங்கி நூதன போராட்டம் செய்த வீட்டுப் பெண்கள்...

இதில் வைரவன் மனைவி அமுதா பலத்த காயத்துடன் தற்போது வரை கா.நா. வழக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.

இது தொடர்பாக பழனி செட்டிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்து மூன்று நாட்களாகியும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் ஆத்திரமடைந்த மாரியம்மன் கோவில் பட்டியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள்  இந்த நான்கு முனை சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் இதன் காரணமாக சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு சென்ற பணியாளர்கள் மிகவும் சிரமம் அடைந்தனர்.

மேலும் படிக்க | நாணயங்களை விழுங்கிய முதியவர்... ! அறுவை சிகிச்சை மூலம் அகற்றிய சம்பவம்...!

காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக கிராம மக்களிடம் உறுதி அளித்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செல்ல வைத்தனர்.

வைரவன் மனைவி அமுதா மிகவும்  கா.நா விளக்கு அரசு மருத்துவமனையில் மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சையில் மேற்கொண்டு வரும் நிலையில் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் மிகப்பெரிய அளவில் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரித்து கலைந்து சென்றனர்.

மேலும் படிக்க | சுரங்கப்பாதை அமைக்க கோரிய மக்கள்...! சாலை மறியல் போராட்டம்...!