சிங்கபெருமாள் கோவில் பகுதியில் சாலை விரிவாக்கப்பணி.. போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி!!

சிங்கபெருமாள்கோவில் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

சிங்கபெருமாள் கோவில் பகுதியில் சாலை விரிவாக்கப்பணி.. போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி!!

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரில் இருந்து சிங்கபெருமாள்கோவில் வரை தேசிய நெடுஞ்சாலையில் சாலை விரிவாக்கப்பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில்,  தென்மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வரக்கூடிய வாகனங்கள் அதிகப்படியாக வருவதால் தேசிய நெடுஞ்சாலையில், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

சுமார் ஒருகிலோ மீட்டார் தூரத்திற்கும் மேலாக வாகனங்கள் வரிசைக் கட்டி நிற்கின்றன. மேலும் வாகனங்கள் ஊர்ந்து செல்வதால்,  வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், வாகன போக்குவரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால், சிங்கபெருமாள் கோவில் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.  எனவே சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.