மைல்கல்லுக்கு அபிஷேகம் செய்த சாலை பணியாளர்கள்...! ஆயுதபூஜை கொண்டாட்டம்..!

மைல்கல்லுக்கு அபிஷேகம் செய்த சாலை பணியாளர்கள்...! ஆயுதபூஜை கொண்டாட்டம்..!

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த திருத்துறைப்பூண்டி - வேதாரண்யம் நெடுஞ்சாலையில் தகட்டூரில் சாலைப் பணியாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் ஆயுத பூஜை கொண்டாடினார்கள். அப்போது மைல்கல்லை துடைத்து மஞ்சள்பொடி, திரவியபொடி, தேன், சந்தனம், பால், இளநீர், பன்னீர் கொண்டு அபிஷேகம் செய்தனர்.

பின்னர் மைல் கல்லுக்கு சந்தனம், குங்குமம் பொட்டு வைத்து, மாலை அணிவித்து வாழை மரம் கட்டி, தாங்கள் பயன்படுத்தும் கத்தி, மண்வெட்டி உள்ளிட்ட உபகாரணங்களை வைத்து தேங்காய் உடைத்து சுண்டல், சர்க்கரை வைத்து தீபாரதனை செய்து வழிபட்டனர். அதனை தொடர்ந்து சாலையில் சென்ற வாகனங்களை நிறுத்தி சுண்டல், பழங்களை வழங்கினர்.

ஆயுதபூஜை என்றால் வழக்கமாக மக்கள் தாங்கள் பயபடுத்தும் பொருட்களை வைத்து வழிபடுவார்கள். ஆனால் வேதாரண்யத்தில் நெடுஞ்சாலைத்துறையினர் ஆண்டு முழுவதும் சாலையில் வேலை செய்வதால் தங்கள் தெய்வமாக நினைக்கும் மைல் கல்லுக்கு ஆயுத பூஜை வழிபாடு நடத்தியது இப்பகுதி மக்களையும், வாகன ஓட்டிகளையும் வெகுவாக கவர்ந்தது.