பழனி கோயிலில் நிறுத்தப்பட்ட ரோப் கார் சேவை... காரணம் என்ன?!!

பழனி கோயிலில் நிறுத்தப்பட்ட ரோப் கார் சேவை... காரணம் என்ன?!!
Published on
Updated on
1 min read

பழனி மலை முருகன்  கோவில் ரோப் கார் சேவை மாதாந்திர பராமரிப்பு பணிக்காக இரண்டு நாட்கள் மட்டும் நிறுத்தப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் திருவிழா மற்றும் விசேஷ காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தருகின்றனர். பக்தர்கள் படிப்பாதை, யானை பாதை மின் இழுவை ரயில்,  ரோப் கார் சேவை மூலமாக மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். 

ரோப் கார் சேவை மாதத்திற்கு ஒரு நாளும், வருடத்திற்கு 45 நாட்களும் பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்படுவது வழக்கம்.  அதேபோல இந்தமுறை  இன்றும் நாளையும் ரோப் கார் சேவை மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் ரோப்காரில் உள்ள சப்ட்டுகல், பெட்டிகள்,கம்பி வடம் , உருளைகள் உள்ளிட்டவைகளிலும் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. 

மீண்டும் நாளை மறுநாள் வழக்கம்போல் ரோப் கார் சேவை இயக்கப்படும் எனவும் பக்தர்கள் படிப்பாதை, யானை பாதை, மின் இழுவை ரயில் மூலமாக மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து கொள்ளுமாறும் கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com