சிம்ஸ் பூங்காவில் அழுகிய மலர்கள்...! சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்...!

சிம்ஸ் பூங்காவில் அழுகிய மலர்கள்...!   சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்...!

நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் உரிய பராமரிப்பு இல்லாததால் பூக்கள் அழுகி நிலையில் உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். 

கோடை சீசனையொட்டி சிம்ஸ் பூங்காவில் நாளை மறுதினம் பழக் கண்காட்சி நடைபெற உள்ளதையொட்டி 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டிருந்தன. 

இந்நிலையில், உரிய பராமரிப்பு இல்லாததால் ஏராளமான மலர்கள் அழுகிய நிலையில் உள்ளன. இதனால், அரிய வகை பூக்களை பார்க்க முடியாமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் ஊர் திரும்பினர். 

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பராமரிப்பு இல்லாமல் பூக்கள் அழுகி காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நாளை மறுதினம் நடைபெற உள்ள பழக்கண்காட்சிக்கு  2 லட்சத்திற்கு மேற்பட்ட மலர்  செடிகள் நடவு செய்யப்பட்டு இருந்தன . இவைகள் சரியான பாரமறிப்பு  இல்லாமல் கால நிலை மாற்றத்தாலும்  பூக்கள் அழுகி காணப்படுகிறது. 

இந்நிலையில், இங்கு வரும் சுற்றுலா பயணிகள் அரிய வகை பூக்களை பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் செல்கின்றனர். தற்போது கால நிலை மாற்றதால் சுற்றுலா பயணிகள் வருகை குறைவாக காணப்படுகிறது.

இதையும் படிக்க    | நடிகர் விஜய்சேதுபதி மீது கதை திருட்டு புகார்...!